உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்ச டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

லஞ்ச டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

மைசூரு: அறுவை சிகிச்சை செய்ய, லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை டாக்டருக்கு, நான்காண்டுகள் சிறை தண்டனை விதித்து, மைசூரு நீதிமன்றம்தீர்ப்பளித்தது.மைசூரின், கே.ஆர்., மருத்துவமனையில், 2017ல் தேவராஜ் என்பவரின் உறவினர், எலும்பு தொடர்பான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய, 40,000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென, அம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் புட்டசாமி கேட்டார்.இதுதொடர்பாக, ஏ.சி.பி.,யில் தேவராஜ் புகார் அளித்தார். 2017 ஏப்ரல் 12ல், இவர் 26,000 ரூபாயை புட்டசாமியிடம் கொடுத்தபோது, ஏ.சி.பி., அதிகாரிகள், கையும் களவுமாக பிடித்தனர்.விசாரணை முடித்து, மைசூரின் மூன்றாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். புட்டசாமியின் குற்றம் உறுதியானதால், அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை