உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் தொற்று நோய்கள் 4,000 பேருக்கு பரிசோதனை

அதிகரிக்கும் தொற்று நோய்கள் 4,000 பேருக்கு பரிசோதனை

பெங்களூரு: கர்நாடகாவில் தொடர் மழையால், டெங்குவுடன், தொற்று நோய்களும் அதிகரித்து வருகிறது. 4,000க்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.கர்நாடகாவில் ஏற்கனவே 9,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த பத்து நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.வெயில், மழை என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருகிறது. பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நோயின் அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவமனைகளில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த ஒரு மாதமாக, டெங்கு காய்ச்சலுடன் கால்நடைகளால் பரவும் 'பாக்டீரியா' தொற்று மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்வோர் அதிகரித்துள்ளனர்.கர்நாடகாவில் தற்போது மலேரியா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு இந்நோய் இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.

வயிற்று போக்கு

மாநிலத்தின் பல இடங்களில் அசுத்தமான குடிநீர், உணவு உட்கொள்வதால், வயிற்று போக்கு ஏற்படும் சம்பவங்கள் மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்து உள்ளன. கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் 78 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, 4,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. வைரஸ் காய்ச்சல் உட்பட பல்வேறு மருத்துவ பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.ரன்தீப், கமிஷனர், சுகாதார துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்