உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராமங்களில் 47 வளர்ச்சிப் பணி துணைநிலை கவர்னர் அடிக்கல்

கிராமங்களில் 47 வளர்ச்சிப் பணி துணைநிலை கவர்னர் அடிக்கல்

புதுடில்லி:டில்லி கிராமோதய அபியான் திட்டத்தின் கீழ், வடக்கு டில்லியில் 29 கிராமங்களில் 5 கோடி ரூபாய் செலவில் 47 வளர்ச்சித் திட்டங்களுக்கு துணைநிலை கவர்னர் சக்சேனா நேற்று அடிக்கல் நாட்டினார்.இதுகுறித்து, கவர்னர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தென்மேற்கு டில்லியில் 18 கிராமங்களில் 22 வளர்ச்சித் திட்டங்களை கவர்னர் சக்சேனா கடந்த வாரம் துவக்கி வைத்தார். சிங்கு கிராமத்தில் நடக்கும் சாலை மற்றும் வடிகால் அமைத்தல் மற்றும் தகன மேடை புதுப்பித்தல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். கிராம மக்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய சக்சேனா, “கிராமங்களில் செய்யப்பட்டும் வளர்ச்சிப் பணிகள் கிராம மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிரதமர் துவக்கி வைத்த 'நமோ ட்ரோன் தீதீ' திட்டத்தால் சுய உதவிக் குழு பெண்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது.கிராம வளர்ச்சிக்காக டில்லி அரசிடம் பயன்படுத்தப்படாமல் இருந்த 960 கோடி ரூபாய், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்வதற்காக டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.இதுவரை, 523 கோடி ரூபாய் செலவில் 573 வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், மேம்பாட்டு ஆணையத்தின் 89 திட்டங்கள் அடங்கும். சாலை, உள்கட்டமைப்பு மேம்பாடு, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பொது கழிப்பறைகள், சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள், ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு, தகன மேடை, கல்லறைக, கப்ரிஸ்தான், விளையாட்டு மைதானம், நூலகம், கோசாலை, தெருவிளக்கு மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை