உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன

5 மரங்கள் வேரோடு சாய்ந்தன

புதுடில்லி:தலைநகர் டில்லியில் வெப்பநிலை நேற்று, அதிகபட்சமாக 36 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் இயல்பை விட 1.8 டிகிரி அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு, மத்திய மற்றும் ரோஹினி மண்டலங்களில் நேற்று லேசான மழை பெய்தது. மேலும், 5 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. காற்றில் ஈரப்பதம் மாலை 5:30 மணிக்கு 63 சதவீதமாக இருந்தது. காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 6:00 மணிக்கு 63 ஆக இருந்தது.இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கணித்துள்ள வானிலை மையம் சில இடங்களில் லேசான் மழை பெய்யும் என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்