உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்

32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜலவார்: ராஜஸ்தானில் 32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜலவார் மாவட்டத்தில் விவசாய நிலத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரஹலாத் எனும் 5 வயது சிறுவன், நேற்று மதியம் சுமார் 1.15 மணியளவில், அங்கு தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதையறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, 32 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் மயக்க நிலையில் இருப்பதாகவும், தேவையான ஆக்சிஜன் பைப் வழியாக வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் சிறுவனை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், 'கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் இந்த ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. தண்ணீர் ஏதும் வராததால், அதனை மூட திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டது,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkatesan Srinivasan
பிப் 24, 2025 11:56

இந்த பயலுக தண்ணீர் லீக் ஆகும் குழாயும் மூட மாட்டார்கள், தண்ணீர் ஊறாத போர்வெல் லும் மூடி வைக்க மாட்டார்கள். இவர்களே விபரீதம் நடக்க வைத்துவிட்டு பிறகு அரசாங்கத்தை குறை சொல்வார்கள். அவர்களுடைய சொத்துகளை கையகப்படுத்தி செலவுகளை ஈடுகட்ட வேண்டும்.


Ray
பிப் 24, 2025 10:49

மூடறதுக்கு பெரிய திட்டம் போடவேண்டியதில்லை ஒரு பாறாங்கல்லை வைத்தால் முடிந்தது வடக்கே இந்தி மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் கதையாக உள்ளது மீட்பு பணிக்கான செலவை சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து வசூல் செய்தால் மீண்டும் நடக்காமல் தடுக்கலாம் அரசாங்கமும் ராணுவமும் எதோ தவறு செய்துவிட்டாற்போல ஓடோடிவந்து மீட்ப்பு பணியில் இலவசமாக ஈடுபடுவது தேவையா? இங்கே ஒன்றிரண்டு நடந்தவுடன் மக்களும் அரசும் விழித்துக் கொண்டு மீண்டும் நடக்காமல் தடுத்து விட்டார்கள்


குழந்தைசாமி
பிப் 24, 2025 08:26

கிணத்த மூடறதுக்கு முன்னாடி குழந்தையின் தந்தையே நீயும் அதே கிணத்தில் வுழுந்துரு. போடாங்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை