யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் மேலும் 6 இடங்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'யுனெஸ்கோ' எனும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் உத்தேச பட்டியலில் இணைக்க, மேலும் ஆறு புராதன சின்னங்களை இந்தியா சேர்த்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக விளங்கும் யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ளது. இதில், இந்தியா உட்பட பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக மரபு சின்னங்கள் பட்டியலில், பல நாடுகள் தங்களின் முக்கியமான பாரம்பரிய இடங்களை அவ்வப்போது சேர்த்து வருகின்றன. ஆய்வுக்கு பின், யுனெஸ்கோ பட்டியலில் அவை சேர்க்கப்படுகின்றன.ஏற்கனவே இந்தியா தரப்பில் 43 பாரம்பரிய சின்னங்கள் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் ஆறு சின்னங்களை, அதற்கான உத்தேச பட்டியலில் சமீபத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது.அவற்றில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் சமவெளி தேசிய பூங்கா, தெலுங்கானாவில் உள்ள முதுமள் கற்துண்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள புண்டேலா ராஜபுத்ர மன்னர்களின் கோட்டைகள் உள்ளிட்டவை அடக்கம். இதன் வாயிலாக, உத்தேச பட்டியலில் 62 இடங்களை பாரம்பரிய சின்னங்களாக மத்திய அரசு இணைத்துள்ளது.