உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவுக்கு ரூ.60,000 கோடி: மத்திய அரசு தாராளம்

ஆந்திராவுக்கு ரூ.60,000 கோடி: மத்திய அரசு தாராளம்

புதுடில்லி: சமீபத்தில் ஆந்திர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வரானார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், முக்கிய கூட்டணி கட்சியாகவும் தெலுங்கு தேசம் உள்ளது.ஆந்திராவின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. அதில், 60,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் முனையத்தை அமைப்பது முக்கிய கோரிக்கையாகும்.இது தொடர்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான, பி.பி.சி.எல்., எனப்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவன உயரதிகாரிகளுடனும் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் இந்த முதலீட்டுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மத்திய பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், மச்சிலிபட்டினம், ராமையபுரம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Saravanaperumal Thiruvadi
ஜூலை 13, 2024 10:17

பத்து வருடமாக கிடைக்காதது இப்ப கிடைக்கிறது என்றால் பாஜக பிடி சந்திரபாபு நாயுடு கையில் இருக்கிறது


சொல்லின் செல்வன்
ஜூலை 12, 2024 12:23

குடுத்துதானே ஆகணும். நம்ம பிரதமரின் நிலை அப்படி


ES
ஜூலை 12, 2024 11:35

This is nothing but a start. Slap in face for people of other states


SUBBU,MADURAI
ஜூலை 12, 2024 11:32

Andhra Pradesh to get a Rs 60,000 crore petrochem hub Whatever else you say about Naidu his politics is about building things It is not about obstruction, dharnas, strikes, roadblocks BJP


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 11:25

நாற்பதுக்கு நாற்பது சும்மா இருக்க மாட்டோம். அங்கு 60000 கோடினா எங்களுக்கு 1 லட்சம் கோடியாவது வேண்டும். பணமாகத்தான் தர வேண்டும். இது போன்ற திட்டங்களாக தரக்கூடாது. நாங்கள் எந்த தொழிற்சாலையும் ஆரம்பிக்க நடந்த விடமாட்டோம். மீறி ஆரம்பித்தால் சீனகாரன் சொன்னால் இழுத்து மூடி விடுவோம். முடிந்தால் கேஸாக கொடுத்தால் நல்லது.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:08

அப்போ திட்டம் ஓங்கோல் அருகே கிடையாதா?


Sampath Kumar
ஜூலை 12, 2024 09:45

அப்படி போடு ஆந்திராவுக்கு அதிக பண்ணாம புரிகின்றது அய்யா ஜின் பயம் இல்லாவிட்டால் நாய்டு காரு அவரு வேலையை காட்டுவரு இல்ல தமிழ்நாட்டுக்கு ஆப்பு ஆந்திராவிற்கு பருப்ப ?/


Ramesh Sargam
ஜூலை 12, 2024 08:48

இதவிட பெரிய ஜாக்பாட் நாயுடுவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஊழல் எதுவும் செய்யாமல், நேர்மையாக, முறையாக மாநில முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால், ஆந்திரா மாநிலம் கட்டாயம் இந்தியாவில் முதல் மாநிலம். செய்வாரா நாயுடு?


Velan Iyengaar
ஜூலை 12, 2024 08:11

இல்லையென்றால் பியூஸ் பிடிங்கிடுவாங்க இல்லை


Venkates.P
ஜூலை 12, 2024 09:43

எவன் பீஸ். திருட்டு திராவிட பீஸ்தான் கிரிப்டோ


Velan
ஜூலை 12, 2024 06:23

இல்லனா கதை கந்தலாகிடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை