உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தரிசனம் செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள்; காரணம் என்ன?

தரிசனம் செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள்; காரணம் என்ன?

கோபேஷ்வர்: உத்தரகண்டில், 'சார்தாம்' யாத்திரையின் ஒரு பகுதியாக, பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்களை, முறையாக பதிவு செய்யாத காரணத்தால் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்களில், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த நான்கு கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, 'சார்தாம்' யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை, கடந்த 12ம் தேதி துவங்கியது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வரும்படியும், பதிவு செய்யாமல் வருவோருக்கு கோவில்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்றும் உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. பத்ரிநாத் கோவிலை பொறுத்தவரை, தினசரி 20,000 பேர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பத்ரிநாத் கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், பதிவு செய்யாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து, போலீசார் கூறுகையில், 'பதிவு செய்யாமல் பத்ரிநாத் கோவிலுக்கு வந்த 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், கவுச்சார் சோதனைச்சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். பதிவு செய்யாத பக்தர்களை, பத்ரிநாத்துக்கு அழைத்து வந்த ஐந்து டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'கூட்டத்தை கட்டுப்படுத்தவே, பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2024 08:41

இதே அளவுகோலை Yardstick அரசியல் தலைவர்களது மீட்டீங்குகளுக்கு கூட்டி வரும் கூட்டங்களுக்கும் நிர்ணயிக்க முடியுமா யுவர் ஆனர்? அதே போல ரமலான் பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களிலும் தேவாலயங்களிலும் பள்ளிவாசல்களிலும் அமல்படுத்தமுடியுமா யுவர் ஆனர்?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ