உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து 72,162 கன அடி உபரி நீர் வெளிேயற்றம்

கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து 72,162 கன அடி உபரி நீர் வெளிேயற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று மொத்தம் 72,162 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவின் கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை வேகமாக நிரம்பி வருகிறது.இந்த அணையின் முழு கொள்ளளவான, 49.452 டி.எம்.சி.,யில் நேற்று 47.106 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2.346 டி.எம்.சி.,மட்டுமே பாக்கி உள்ளது. நேற்றிரவு வரை அணைக்கு 70,850 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 52,162 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.தண்ணீர் வெளியேற்றப்படுவதை பார்க்க, ஞாயிற்று கிழமையான நேற்று பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

கபினி அணை

இதுபோன்று, மைசூரு மாவட்டம், ஹெக்கதேவன கோட்டையில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி., தற்போது 17.77 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1.75 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. தற்போது அணைக்கு 39,396 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 35,917 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று மொத்தம் 72,162 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு செல்கிறது.22_DMR_0009கடல் போன்று காட்சி அளிக்கும் கே.ஆர்.எஸ்., அணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை