உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவ படிப்பில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும்: பிரதமர் மோடி

மருத்துவ படிப்பில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும்: பிரதமர் மோடி

புதுடில்லி: '' அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் 75 ஆயிரம் இடங்கள் இடங்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என பிரதமர் மோடி கூறினார்.பட்ஜெட்டிற்கு பிந்தைய வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கு முதலீட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் புதுமையான முன்னெடுப்புகளுக்கும் அதேமாதிரியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., ஆராய்ச்சிக்காக தேசிய அளவில் பெரிய மொழி மாதிரி( Large Language Model -LLM) ஆய்வகம் அமைக்கப்படும். இந்த துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். சுற்றுலாத்துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

கல்விக் கொள்கை

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கல்வி அமைப்பு பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐஐடி.,க்கள் விரிவாக்கம், கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது, ஏஐ.,யின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது, பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது, பாடங்களை 22 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வது என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.2014க்கு பிறகு 3 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்துவதுடன், திறமைக்கான மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. தொழில்துறைக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு உள்ளோம். இந்த பட்ஜெட்டில், மருத்துவ படிப்பில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ துறையில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தாமரை மலர்கிறது
மார் 05, 2025 20:14

வடமாநிலங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களை உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் எம்பிக்கு ஒதுக்க வேண்டும்.


Iyer
மார் 05, 2025 19:26

புற்று நோய்க்கு அல்லோபதி மருத்துவம் செய்வது = மூட்டைக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு சமம். அல்லோபதி மருத்துவம் எடுத்துக்கொண்டு புற்று நோயில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் லக்ஷத்தில் ஓரிருவர் இருப்பார்கள் அந்த ஓரிருவரும் நடைப்பிணமாய் இருப்பார்கள். ஆனால் NATUROPATHY 1௦௦% புற்றுநோயை - செலவில்லாமல் குணப்படுத்தும். ஆனால் நம் அரசுகள் அல்லோபதி என்ற நச்சு மருத்துவத்தில் இவ்வளவு பணம் ஏன் விரயம் செய்கிறது


ஆரூர் ரங்
மார் 05, 2025 22:27

நவீன மருத்துவ வசதிகள் வந்த பின்னர் மக்களின் சராசரி ஆயுட்காலம் 29 லிருந்து 70 ஆக உயர்ந்துள்ளது. பாட்டி வைத்தியம் 29 வயது மட்டுமே வாழ.வைத்தது


Iyer
மார் 05, 2025 19:16

அல்லோபதி படிப்புக்கு இவ்வளவு செலவு செய்வதை விட்டு ஆயுர்வேதம், இயற்கை வைத்தியத்துக்கு செலவு செய்யணும்.


B.V. Prakash
மார் 05, 2025 19:14

மருத்துவ படிப்பின் மோகம் குறையும்


Iyer
மார் 05, 2025 19:14

அல்லோபதி மருத்துவமோ, படிப்போ, மருந்துகளோ, நவீன ஆஸ்பத்திரிகளோ இதுவரை ஒரு நோயாளியையும் குணமாக்கியதாக சரித்திரம் இல்லை. பின் ஏன் கோடிக்கணக்கில் பணத்தை இந்த வீணாக அல்லோபதி படிப்புக்கு விரயம் செய்கிறார்கள்?


அப்பாவி
மார் 05, 2025 18:36

சீக்காளிகள் 75 கோடி பேர் அதிகமாயிட்டாங்க.


Sakthi,sivagangai
மார் 05, 2025 20:22

அதில் உன்னைப் போன்ற பல்லு போனவர்கள் எத்தனை பேர் அதையும் கேளு அப்புசாமி


vivek
மார் 05, 2025 21:33

முதல் சீக்காளி நீ தான்னு சொன்னா கூட உனக்கு சொரணை வராது


GoK
மார் 05, 2025 18:18

முதலில் அரசியல் கொள்ளையர்கள் மருத்துவ படிப்புகள், மருத்துவ மனைகள் நடத்துவதிலிருந்து விடுவியுங்கள். உச்ச நீதி மன்றம் ஒவ்வொரு கல்லூரியையும் பெரிய மருத்துவமனையையும் யார் நடத்துகிறார்கள் என கண்டு பிடிக்க சொல்லுங்க சிபிஐ உதவியுடன் மக்கள் ஒத்துழைப்புடன்.


Barakat Ali
மார் 05, 2025 17:27

நீட் ஐ ரத்து பண்ணிட்டு இதைச்செஞ்சிருந்தா எங்க 420 தலீவர் உங்களுக்கு ஆதரவு தந்திருப்பார் .....


K.n. Dhasarathan
மார் 05, 2025 17:03

எப்படி மதுரை அய்ய்ம்ஸ் மாதிரியா ? அப்படியானால் பல லட்சம் இடங்கள் அதிகரிக்கலாம். அங்கு படித்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் போச்சே யார் தருவார் ? பொய்களுக்கு அளவில்லையா ?


Velan Ayangaar, Sydney
மார் 05, 2025 18:43

ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு. பித்தலாட்ட மாடல். தசரதன் முட்டு 200 ரூவா ஊ ஃபீஸ் கன்பர்ம்


நாகராஜன்,செங்கோட்டை
மார் 05, 2025 20:25

ஏலே அது எய்ம்ஸ்டா அறிவாலய அடிமையே தமிழில் கூட ஒழுங்காக கருத்தை போட துப்பு இல்லை


Balasubramanian
மார் 05, 2025 16:56

அதிக இடம் நீட் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு! இந்தி போல் நீட் தேர்வை புறக்கணிக்கும் மாநிலம் என்ன செய்யும்? மதுரையில் மருத்துவ மனை கட்டி விட்டு மருத்துவர்களுக்கு காத்திருப்பது போல காத்திருக்க வேண்டியது தான்! வெளி மாநில மருத்துவர்கள் இங்கு வரத் துணிய மாட்டார்கள்


புதிய வீடியோ