மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
46 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
57 minutes ago
டில்லி ; டில்லி மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 77.48 லட்சம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர். மெட்ரோ
தலைநகர் டில்லியில் பொதுமக்களின் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது டில்லி மெட்ரோ ரயில் சேவையாகும். நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சாதனை
அந்த வகையில், கடந்த ஆக., 13ம் தேதி 72.38 லட்சம் பேர் டில்லி மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர். இதுவே டில்லி மெட்ரோ ரயிலை ஒரே நாளில் அதிகம் பயன்படுத்திய மக்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
முறியடிப்பு
இந்த சாதனை ஒரே வாரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்பு மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டன. அன்றைய தினம் மட்டும் 77.48 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது டில்லி மெட்ரோ ரயிலில் ஒருநாளில் அதிக மக்கள் பயன்படுத்திய சாதனையாக அமைந்துள்ளது.
46 minutes ago
57 minutes ago