உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் 79 தொகுதிகள் நாங்கள் தான் வெற்றி: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

உ.பி.,யில் 79 தொகுதிகள் நாங்கள் தான் வெற்றி: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'உத்தர பிரதேசத்தில் இந்த முறை 79 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உ.பியில் உள்ள 80 தொகுதிகளில், 63 தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும், மீதமுள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

79 தொகுதிகள்

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் இந்த முறை 79 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே போட்டி நிலவுகிறது. பா.ஜ.,வின் அரசியலை இன்று யாரும் விரும்பவில்லை.

எதிர்காலம்

இந்தியா முழுவதும் இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெல்லும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் பிரதமர் யார் என்பதை, நம் எம்.பி.,க்கள் முடிவு செய்வார்கள். இந்தத் தேர்தல் நமது எதிர்காலத்திற்கான தேர்தல். ஒருபுறம், சிலர் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள்.

வீணாக்காதீர்கள்

மறுபுறம், இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் அரசியலமைப்பைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். இண்டியா கூட்டணியை தவிர வேறு யாருக்கும் ஓட்டளித்து தங்கள் ஓட்டுகளை வீணாக்காதீர்கள் என பகுஜன் சமாஜ் கட்சியினரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rajasekar Jayaraman
மே 13, 2024 10:17

சொல்றதுதான் சொல்ற என்பது தொகுதியையும் சொல்லிட்டேன்.


Anantharaman Srinivasan
மே 12, 2024 22:50

இந்தமுறை அதிக தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இண்டியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புண்டு


R Kay
மே 13, 2024 02:12

அப்படியா? அப்படியே கொஞ்சம் உண்மை பெயரில் கருத்து கூறலாமே


AK
மே 12, 2024 19:21

why not to add that one seat as well ????


தமிழ்வேள்
மே 12, 2024 19:20

நீ அடிச்சு விடு கோனாரேகாசா பணமா?


Natarajan Ramanathan
மே 12, 2024 19:12

உத்திரபிரதேசத்தில் மொத்தம் என்பது தொகுதிகள் அதில் மோடிஜி நிற்கும் வாரணாசி தொகுதியில் தாங்கள் வெற்றிபெறுவோம் என்று சொல்லக்கூட தைரியம் இல்லாமல் எழுபத்துஒன்பது தொகுதியில் வெற்றி என்று ஊளை இடுகிறார்


Durai
மே 12, 2024 18:47

பொதுமக்கள் உங்கள்மேல் சரமாரியாக செருப்பு வீசுவதாக ஒரு வீடியோ பார்த்தேன் உண்மையா பொய்யா தெரியவில்லை


R Kay
மே 12, 2024 18:28

ஜுன் நான்காம் தேதி மாலை என்ன சொல்வது என தயார் செய்து வைத்துக் கொள்ளவும் மக்கள் எப்படியும் உங்கள் முகத்தில் கரி பூசிவிடுவார்கள்


HoneyBee
மே 12, 2024 18:14

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு


கட்டத்தேவன்,,திருச்சுழி
மே 12, 2024 17:58

உத்திரப்பிரதேசத்தில் இவர் மனைவி டிம்பிள் நிற்கும் Kannauj தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் இவருடைய சமஜ்வாடி கட்சியும், I.N.D.I கூட்டணியும் தோல்வியடைவது உறுதி.


saravan
மே 12, 2024 17:10

அப்புறமென்னப்பா அடுத்த வார்டு மெம்பெர் நீங்க தான்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி