உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக அமைதிக்காக 8,000 கி.மீ., தூரம் நடைபயணமாக சபரிமலை வந்த பக்தர்கள்

உலக அமைதிக்காக 8,000 கி.மீ., தூரம் நடைபயணமாக சபரிமலை வந்த பக்தர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: உலக அமைதிக்காக 8 ஆயிரம் கி.மீ., தூரம் நடைபயணமாக வந்து சபரிமலையில் இரண்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக் மற்றும் சம்பத்குமார் ஷெட்டி. இவர்கள் உலக அமைதிக்காக சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என முடிவு செய்தனர்.இதற்காக கடந்த ஆண்டு மே 26 ல் கேரளாவில் இருந்து பத்ரிநாத்திற்கு ரயில் மூலம் சென்றனர். அங்கிருந்து இருமுடி கட்டி ஜூன் 3ம் தேதி தங்களது பயணத்தை இருவரும் துவக்கினர். வழியில், பல்வேறு ஆன்மிக ஸ்தலங்கள் மற்றும் கோவிலுக்குள் சென்ற அவர்கள், சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்களுக்கும் சென்றனர். வழியில் பல்வேறு கோயில்களில் தங்கிய அவர், அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அயோத்தி, உஜ்ஜயினி, புரி, சிவசங்கர், ஜகன்நாத், ராமேஸ்வர், அச்சன்கோவில், எருமேலி வழியாக சபரிமலை வந்த இவர்கள் உலக அமைதி வேண்டி ஐய்யப்பனிடம் வேண்டிக் கொண்டதாக இன்று சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜன 12, 2025 19:46

நீங்க ரெண்டு பேராவது வேட்டியை பம்பையில் அவுத்து உடாதீங்க. உலகத்துக்கு உங்களாலான நன்மையைச் செய்யுங்க.


kishor kumar
ஜன 12, 2025 14:48

அன்புள்ள சகோதரரே, இது கலியுகம். இந்த உலகத்தில் மற்றவர்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது கடினம். குறைந்த பட்சம் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள்.


pmsamy
ஜன 12, 2025 12:12

கூமுட்டைகள்


Sampath Kumar
ஜன 12, 2025 10:53

இது எல்லாம் தேவையா? இவரு நடந்து வந்ததால் உலகம் அமைதி பூங்காவாக மாறிவிட்டதா? சுத்த பேத்தல் மதம் என்ற இந்த ஓன்று இல்லாமல் போக போகிறது மதவாதிகளின் நம்பிக்கை மழுங்க அடிக்கப்பட்டு வருகிறது வளந்துவரும் தொழில் நுட்பம் அதனை செய்கிறது விரைவில் மனித குலம் மதத்தை தூக்கி வீச தான் போகிறார்கள்


அப்பாவி
ஜன 12, 2025 08:10

அமைதி வந்துருச்சா? நம்பிக்ஜை வேற. நடப்பது வேற.


Varadarajan Nagarajan
ஜன 12, 2025 06:38

இதுதான் ஹிந்து மதத்தின் தனிச்சிறப்பு. கடவுளிடம் தனக்கு வேண்டும் என பிரார்த்திப்பதைவிட "சமஸ்த்த லோஹா சுகினோ பவந்து" மற்றும் "லோக க்ஷேமம்" என அனைவருக்காகவும், உலக மக்களுக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்குமாக பிரார்த்திப்பது என்பது ஹிந்துக்களின் வழிபாட்டுமுறை. "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" என்பதுபோல இவர்களது பிரார்த்தனையின் பயனாக அனைவரும் நலமோடு வாழவேண்டும்


Kumar Kumzi
ஜன 12, 2025 00:43

மூர்க்க காட்டுமிராண்டிகள் இருக்கும் வரை இவ்வுலகில் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை


ஆனந்த்
ஜன 11, 2025 22:26

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அய்யப்பன், இதற்கு நிச்சயம் செவி சாய்ப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை