உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோயில் சுவர் இடிந்து 9 பேர் பலி : பிரதமர் நிதி

கோயில் சுவர் இடிந்து 9 பேர் பலி : பிரதமர் நிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.இங்கு சாகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஷாபூரின் ஹர்தவுல் பாபா கோயிலில் வழிபாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 9 குழந்தைகள் பலியாயினர்.இது குறித்து பிரதமர் மோடி தனது ‛ எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு அழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஆக 04, 2024 22:16

செத்தாலும் ம.பி, உ.பி, குஜராத்தில் சாவணும். இல்லே தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடிச்சு சாவணும்


J.Isaac
ஆக 04, 2024 21:19

வயநாட்டிற்கு பிரதமர் நிதி எப்போது ?


ஆரூர் ரங்
ஆக 04, 2024 21:47

வார்னிங் கொடுத்தாலும் அசட்டையாக இருந்த மாநிலத்துக்கு உதவுவது மற்ற மாநிலங்களுக்கு செய்யும் துரோகம்.. பொறுப்பற்ற ஆட்களுக்கு வாக்களிக்கும் மக்கள் எதிர்மறை பலன்களை அனுபவிக்கட்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை