உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடி

ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடி

புதுடில்லி:ஸ்பைடர்மேன் உடை அணிந்து, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய 19 வயது பெண் மற்றும் வாலிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.புதுடில்லி நஜாப்கரில் வசிப்பவர் ஆதித்யா,20. இவரது தோழி அஞ்சலி,19. இருவரும் ஸ்பைடர் மேன் உடை அணிந்து, ஹெல்மெட் அணியாமல் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்தனர். மேலும், நகர்ப்புற விரிவாக்க சாலை-யில் பைக்கில் சாகசம் செய்து அதை வீடியோவும் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது, வேகமாக பரவியது.இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சாலை விதிமுறைகளை மீறியதற்காக இருவருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்