உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புலிகளிடம் சிக்கிய பசு உயிர் தப்பியது

புலிகளிடம் சிக்கிய பசு உயிர் தப்பியது

மூணாறு : கேரளா மூணாறு அருகே மூன்று புலிகளிடம் சிக்கிய பசு பலத்த காயங்களுடன் உயிர் தப்பியது.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கடலார் எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனில் தொழிலாளர்களுக்குச் சொந்தமான 16 பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்றன. அதில் 10 பசுக்கள் வீடு திரும்பிய நிலையில் ஆறு பசுக்களை காணவில்லை. அவற்றை உரிமையாளர்கள் தேடிச் சென்றபோது தொழிலாளர் ஜெயசங்கரின் பசுவை மூன்று புலிகள் தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டதால் புலிகள் பசுவை விட்டு தப்பி ஓடிவிட்டன. பலத்த காயங்களுடன் பசு உயிர் தப்பியது.கடலார் எஸ்டேட் அருகில் உள்ள கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் ஏப்.24 ல் மூன்று புலிகள் ஒன்றாக நடமாடின. அவை தான் தற்போது பசுவை தாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ