உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்றாந்தாய் மனப்பான்மையில் தங்கச்சுரங்க பகுதிகள்!

மாற்றாந்தாய் மனப்பான்மையில் தங்கச்சுரங்க பகுதிகள்!

தங்கவயல் நகரின் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் இடமே, தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதிகள் என அழைக்கப்படுகிறது. இங்கு, வாழ்வாதாரத்துக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் 1880ல் இருந்து தங்கச்சுரங்கம் மூடப்பட்ட 2001 வரை, தங்கச் சுரங்க நிறுவனமே நிறைவேற்றி வந்தது.மூடும் கட்டத்தில், அடிப்படை வசதிகளை கவனிக்க வேண்டிய பொறுப்பை, மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தம், தங்கச்சுரங்க நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதன்பின், கர்நாடக அரசின் கோலார் மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் தங்கச் சுரங்க நிறுவனம், தங்கவயல் நகராட்சி ஆகியவை இணைந்து நகராட்சியின் பொறுப்பில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.தங்கவயல் நகராட்சியின் 35 வார்டுகளில், வார்டு எண் 2 முதல் 18 வரையிலான, 17 வார்டுகளின் அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து கொடுக்க, 2001ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.அப்போது முதல் இதுவரை 23 ஆண்டுகள், நகராட்சி நிர்வாகமே அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளின் பொது கழிப்பறைகளை துப்புரவு செய்ததில்லை. சாக்கடை கழிவுகளை அகற்றியது இல்லை. குடியிருப்பு பகுதிகளுக்காக தனி நகராட்சி பணியாளர்களை நியமிக்க வில்லை. இதனால் சீர்கேடு தொடருகிறது.இங்கு குடியிருக்கும் வீடுகளை சொந்தம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நகராட்சி, மாநில அரசு, மத்திய அரசு என அனைத்து தரப்பிலும் பேசப்பட்டாலும், யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை.

என்ன காரணம்?

நகர பகுதியான வார்டு எண் 18 முதல் 35 வரையில் உள்ளவர்களே நகராட்சிக்கு 'வரி' செலுத்தி வருகின்றனர். இதனால் வரி செலுத்துவோருக்கு மட்டுமே சுகாதாரம் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.சுரங்க குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களும் வரி செலுத்த தயார். ஆனால், அதற்குரிய வீட்டிற்கு, இப்பவும் சுரங்க நிறுவனத்தார் தான் உரிமையாளர்.இந்த சிக்கலால் வரி பெற வழியற்ற நிலையே நீடிக்கிறது. நகர பகுதியினர் மட்டுமே வாழ்கிற வீடுகளுக்கு வீட்டு வரி, சொத்து வரி செலுத்துகின்றனர்.சுரங்க பகுதியில் உள்ள 25 ஆயிரம் வீடுகளை சேர்ந்தோர் வரி செலுத்த உரிமை இல்லாதவர்களாக உள்ளனர்.கர்நாடக அரசு, நகராட்சிகளுக்கு நிதி வழங்கும் போதெல்லாம், பட்ஜெட்டில் ஒவ்வொரு வார்டுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்வதாக அறிவிப்பு வருவதில் மட்டுமே குறை இருக்காது.ஆனால், அடிப்படை வசதிகள் நடந்திருக்கிறது என்றால் தேடி தான் பார்க்க வேண்டும். வார்டு தோறும் 25 லட்சம் ரூபாய் செலவில் பூங்காக்கள் மட்டும் அமைத்தனர். ஆனால் பராமரிப்பு இல்லாமல் சீர்கெட்டு, விஷ பூச்சிகளுக்கு அடைக்கலமாக உள்ளன.சுரங்க குடியிருப்பு பகுதி நகராட்சி வார்டுகளில் சுகாதார சீர்கேடுகள் தலைவிரித்தாடுவதால் பல்வேறு நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால், சுரங்க குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான், நகராட்சி தலைவர் பதவியில் அமர்ந்தனர்.இவர்கள் காலத்திலாவது, சுரங்க குடியிருப்பு பகுதிகளில் வாழ்வோருக்கு, வீடுகள் சொந்தமாக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்களை ஓட்டு போடும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தினர்.பட விளக்கம்--------------11_KGF_0001 - * பாலக்காடு:தங்கச்சுரங்க நிறுவனத்துக்கு உட்பட்ட பாலக்காடு வார்டில் அவ்வப்போது தெருநாய்கள் கடிக்கு மான்கள் பலியாகின்றன. இங்கும் பல இடங்களில் புதர் மயமாக காட்சியளிக்கிறது. பிட்டர்ஸ் பிளாக் பகுதியில் சாக்கடை நீர் தேங்கி, கொசுக்கள் பெருகி வருகின்றன.11_KGF_0002 - * ஓரியண்டல்:கோரமண்டல் பகுதியில் உள்ள ஓரியண்டல் வார்டில், குப்பைகளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் வருவதில்லை. ஓரியண்டல் பகுதியில் இருந்து டாங்க் பிளாக், கென்னடிஸ் ஏரி வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் செடிகள் மரங்களாக வளர்ந்து காணப்படுகின்றன.11_KGF_0003 - * பெமல் தொழிலாளர் குடியிருப்பு:பெமல் தொழிலாளர் குடியிருப்பு வார்டில் கோரமண்டல் பங்களா பகுதிகள், உக்கட் குடியிருப்பின், ஹென்றீஸின் ஒரு பகுதி சேர்ந்துள்ளது. இங்குள்ள பூங்காவில், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன. 1_KGF_0004 -* டாங்க்:கோரமண்டல் டாங்க் வார்டில் ரயில் தண்டவாள பகுதியில் குப்பைகள் அதிகம். வெஸ்லியன் பிளாக் வட்டத்தில் சாணங்களின் குவியல், பொதுக் கழிப்பறையின் துர்நாற்றம், கொசுக்கள், ஈக்களின் அட்டகாசம் அதிகரித்தவாறு உள்ளது.11_KGF_0005 -* ஹென்றீஸ்ஹென்றீஸ் பகுதியில் பெரும்பாலும் புதர் மயம் தான். இங்கு பாம்பு பிடிப்பவர் ஒருவரை நகராட்சி நியமிக்க வேண்டும். கல்யாண மண்டப கழிவுகள் சாக்கடையாக மிதக்கிறது.11_KGF_0006 -* செல்லப்பாஐ.ஏ.எஸ்., - எம்.பி.பி.எஸ்., - பி.இ.,க்களை உருவாக்கிய செல்லப்பா பள்ளி சிதைந்து வருகிறது. இப்பகுதியில் சாக்கடைகளில் கழிவுகள் மிதப்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. கால்வாய் புதரால் மூடி கிடக்கிறது. நகராட்சி பூங்காவும் புதர் மயம். தியானம் செய்ய முடியாமல் கொசுக்கள் தொல்லை தருகின்றன.11_KGF_0007 -* ஈ.டி.பிளாக் உரிகம் பகுதியில் 'பெரிய லைன்' என அழைக்கப்படும் ஈஸ்ட் டவுன் பிளாக் என்ற ஈ.டி. பிளாக் வார்டில் உள்ள பூசாமி நகர் பகுதியில் நவீன கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், தண்ணீர் வசதி இல்லை. சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு உள்ளது. 11_KGF_0008 - * செயின்ட் மேரிஸ்சாம்பியன் 'ஆர்' பிளாக், 'எம்' பிளாக் பகுதியும் புதர் மயம் தான். திறந்து கிடக்கும் கால்வாயில் குப்பைகள், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.***11_KGF_0001 - * பாலக்காடு:11_KGF_0002 - * ஓரியண்டல்:11_KGF_0003 - * பெமல் தொழிலாளர் குடியிருப்பு:1_KGF_0004 -* டாங்க்:11_KGF_0005 -* ஹென்றீஸ்11_KGF_0006 -* செல்லப்பா11_KGF_0007 -* ஈ.டி.பிளாக் 11_KGF_0008 - * செயின்ட் மேரிஸ்***11_KGF_0001 - *:11_KGF_0002 - * :11_KGF_0003 - * :1_KGF_0004 -* :11_KGF_0005 -* 11_KGF_0006 -* 11_KGF_0007 -* 11_KGF_0008 - * ***- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ