உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்து நிர்வகிக்கும் உரிமை குறித்து காரசார விவாதம்

சொத்து நிர்வகிக்கும் உரிமை குறித்து காரசார விவாதம்

புதுடில்லி, வக்பு திருத்த மசோதா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் காரசார விவாதம் நடந்தது.வக்பு வாரிய சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பாக வக்பு திருத்த மசோதா, லோக்சபாவில், கடந்த 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சபையில் கடும் வாக்குவாதம் நடந்தது. வக்பு சொத்துக்களில் முறைகேடுகளை தடுக்கவே, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.இதையடுத்து இந்த மசோதா, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, பா.ஜ.,வின் ஜகதாம்பிகா பால் தலைமையில், 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவின் முதல் கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. திரிணமுல் காங்.,கின் கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, தி.மு.க.,வின் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் மசோதா குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனையின்போது, மசோதாவின் பல பிரிவுகளுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக, வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்குவது, முஸ்லிம் அல்லாதோர், வக்பு வாரியத்தில் இடம்பெறுவது ஆகிய பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.நீண்ட நேரம் நடந்த கூட்டத்தில், எம்.பி.,க்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். அடுத்த கூட்டம், 30ம் தேதி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ