உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலையில் சீதா தேவி உருவாக்கிய குளம்

மலையில் சீதா தேவி உருவாக்கிய குளம்

கர்நாடகாவில், ராமாயணத்தை நினைவூட்டும் பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றுள் சீதாகல்லும் ஒன்று. ராமன், சீதை, லட்சுமணனுடன் வனவாசத்துக்கு சாட்சியாக நின்றுள்ளது.ராமாயணத்தில் ராமர், சீதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவுக்கு இவர்கள் சஞ்சரித்த பகுதிகளுக்கும் முக்கியத்துவமும், மகத்துவமும் உள்ளது. இவர்கள் பாதம் பட்ட அனைத்து இடங்களும், புண்ணிய தலங்களாக போற்றப்படுகின்றன.அந்த வகையில் சீதாகல்லு மலையும் சிறப்பு பெற்றது. இந்த மலை எங்குள்ளது, இதன் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ள, பக்தர்களுக்கு ஆர்வம் இருக்கும்.ஹாசன், ஹொளேநரசிபுராவின், ஹாரகோடனஹள்ளி கிராமத்தில் சீதாகல்லு மலை அமைந்துள்ளது. ராமன், சீதை, லட்சுமணனுடன், வனவாசம் சென்றபோது சீதாகல்லு மலைக்கு வருகிறார்.இங்கு தங்கியிருந்தபோது, குளிப்பதற்காக மலை மீது சீதை குளம் உருவாக்கி, அதில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமண் எதிர்பாராமல், அங்கு வருகிறார். மைத்துனர் வருவதை கண்ட சீதை, குளத்தில் மூழ்கி, ராமநாதபுராவில் உள்ள குளத்தில் தோன்றியதாக பக்தர்கள் நம்புகின்றனர்.சீதை நீராடிய குளம் இப்போதும் சீதாகல்லு மலையில் உள்ளது. இந்த குளத்தில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றுவதில்லை என்பது, ஆச்சர்யமானது.மலை அருகில் உயரமான மூன்று பெரிய கற்கள் நின்றுள்ளன. எந்த ஆதாரமும் இல்லாமல், கற்கள் நின்றிருப்பது, ராமாயணத்துக்கு சாட்சியாக உள்ளன. சீதாகல்லு மலையில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் உள்ள பாறைக்கற்கள் வரை நீளமான கோடு உள்ளது. சீதையின் தலைமுடி உரசியதில் பாறைக் கற்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மக்கள், சீதை மூழ்கிய இடத்தில் இருந்து ஒரு உலக்கையில் கோழியை கட்டி, நீரில் விட்டனர். இந்த கோழி ராமநாதபுராவின், காவிரி ஆற்றில் மேலே எழுந்து வந்ததை, கண் கூடாக கண்டனர். சீதாகல்லு மலையில் இருந்து, 24 கி.மீ., தொலைவில் ராமநாதபுரா உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்