உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டல் பெயர் பலகையில் சுயவிபரமா? 3 மாநில அரசுகளுக்கு கோர்ட் குட்டு

ஹோட்டல் பெயர் பலகையில் சுயவிபரமா? 3 மாநில அரசுகளுக்கு கோர்ட் குட்டு

புதுடில்லி, உணவகங்களின் பெயர் பலகையில், அதன் உரிமையாளர் பெயர் இடம்பெற வேண்டும் என, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.ஹிந்து நாட்காட்டியின்படி, சிராவண மாதம் நேற்று துவங்கியது. இந்த மாதத்தில், ஹிந்துக்கள் சிவனை வழிப்படுவர். கங்கையில் இருந்து நீர் எடுத்து, வழியில் உள்ள கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்வர். இதற்கான கன்வர் யாத்திரை துவங்கியுள்ளது.இந்நிலையில், யாத்திரை நடக்கும் வழியில் உள்ள உணவகங்கள், அதன் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்ட போலீஸ் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இது மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. இதுபோன்ற உத்தரவை உத்தரகண்ட் அரசும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாநகராட்சியும் பிறப்பித்தன. இந்த உத்தரவுகள் பெரும் அரசியல் சர்ச்சையை எழுப்பியுள்ளது.இது முஸ்லிம்களுக்கு எதிரானது என, பல அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.இந்த உத்தரவுகளை எதிர்த்து, சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்க போலீசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேண்டுமானால், உணவகங்களில் என்னென்ன உணவு கிடைக்கும் என்பதை பட்டியலிடும்படி கூறலாம். இது நம் நாட்டின் அடிப்படைகளுக்கு எதிரானது. அதனால், வரும் 26ம் தேதி வரை இந்த உத்தரவுகளை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.யாத்திரையில் பங்கேற்பவர்களுக்கு சைவ உணவு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, உரிமையாளரின் பெயரை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த மனுக்கள் தொடர்பாக, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேச அரசுகள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 23, 2024 03:10

நமது நாட்டின் உயரிய நீதிமன்ற நீதிபதிகள் கம்யூனிசவழியில் ஹிந்துக்களுக்கான எதிரான முடிவுகளையே எப்போதும் எடுப்பது எதனால்? நாட்டில் கத்திக்கு பயந்து மதம் மாறிய தருதலைகளுக்கு ஆதரவான முடிவையே எடுக்கின்றனர். நமது கோவில்களை மீட்க பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்துவது வெட்கக்கேடு. இதுவே பாலைவன மதத்தினர் ஒரு போராட்டம் அறிவித்தால் போதும். ஹிந்துக்கள் இன்னும் தூங்கிக்கொண்டே இருங்கள்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை