மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
கோலார் : கல்லுாரி கழிப்பறையில் மாணவி, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.கோலார் மாவட்டம், சீனிவாசபூரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கோலார் ரூரல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.யு.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் கல்லுாரியின் கழிப்பறைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் கழிப்பறையில்இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.கல்லுாரி ஊழியர்கள், கழிப்பறைக்குச் சென்று பார்த்தபோது, கல்லுாரி மாணவி, பெண் குழந்தை பெற்றெடுத்தது, தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த கல்லுாரி ஊழியர்கள், மாணவி, குழந்தையை மீட்டு கோலார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது பற்றி அறிந்த கோலார் ரூரல் போலீசார், மருத்துவமனைக்கு சென்று கல்லுாரி மாணவியிடம் விசாரித்தனர்.தனது ஊரை சேர்ந்த அனில் குமார், 21, என்பவர், திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்ததும், கர்ப்பமானதை தன் வீட்டுக்கு தெரியாமல் மறைத்ததும் தெரிந்தது. இதையடுத்து, நேற்று மாலை அனில்குமார் கைது செய்யப்பட்டார்.
1 hour(s) ago