உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வை சரியாக எழுதாததால் நாடு முழுதும் சுற்றி திரிந்த மாணவன்

நீட் தேர்வை சரியாக எழுதாததால் நாடு முழுதும் சுற்றி திரிந்த மாணவன்

கோட்டா,நீட் தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர், காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரை கோவில் கோவிலாக ஏறி இறங்கியுள்ளார். அவரை பெற்றோர் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.

வெளியேறினார்

ராஜஸ்தான் மாநிலம், கங்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் மீனா, 19. இவர் நீட் பயிற்சி மையங்களுக்கு புகழ்பெற்ற கோட்டாவில் தங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய அவர், போதிய மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில், தேர்வு நடந்த அடுத்த நாளான மே 6ல் வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து தன் பெற்றோருக்கு குறுஞ்செய்தியில் தகவல் தெரிவித்தார்.அதில், 'நான் மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை. அதற்காக தவறான முடிவு எதுவும் எடுக்க மாட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டை விட்டு விலகி இருக்க போகிறேன். கையில் 8,000 ரூபாய் உள்ளது. தேவையெனில் தொடர்பு கொள்கிறேன்' என, குறிப்பிட்டிருந்தார். இது குறித்து ராஜேந்திர பிரசாத்தின் தந்தை ஜகதிஷ் பிரசாத் கோட்டா போலீசில் புகாரளித்தார். குடும்பத்தினரும் மூன்று குழுவாக பிரிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மே 29ல் கோவாவில் உள்ள மட்கோவன் ரயில் நிலையத்தில், மாணவர் ராஜேந்திர பிரசாத்தை அவரது தந்தை கண்டுபிடித்தார்.

புனே சென்றார்

இது குறித்து அவர் தந்தை ஜகதிஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோட்டா போலீசார் காணாமல் போன என் மகனை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியம் காட்டினர். அதனால் குடும்பத்தினர் நாங்களே முயற்சித்து மகனை கண்டுபிடித்தோம். நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் ராஜேந்திர பிரசாத் வீட்டை விட்டு வெளியேறினார். தன்னை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக சிம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டு, மொபைல் போனை விற்றுவிட்டு, முதலில் புனேவுக்கு ரயிலில் சென்றுள்ளார்.பின் அங்கிருந்து அமிர்தசரஸ் பொற்கோவில், ஜம்மு --- வைஷ்ணவ தேவி கோவில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என சுற்றியுள்ளார். கோவாவுக்கு வந்த போது அவரை கண்டுபிடித்தோம். முன்பதிவு இல்லாத பெட்டியில் டிக்கெட் இல்லாமல், 23 நாட்கள் நாடு முழுதும் சுற்றி வந்து உள்ளார். தற்போது அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, என்ன விருப்பமோ, அதை செய்யும்படி அறிவுறுத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Priya
ஜூன் 01, 2024 20:07

பாவம் குழந்தைகளுக்கு தான் எத்தனை மன அழுத்தம்...?


Priya
ஜூன் 01, 2024 19:58

பாவம் குழந்தைகள் தான் எவ்வளவு மன அழுத்தம்...


ஆரூர் ரங்
ஜூன் 01, 2024 09:24

ஊர் சுற்றி அனுபவப் படிப்பு படித்திருக்கிறார்.


S MURALIDHARAN
ஜூன் 01, 2024 08:49

தமிழக அரசியல்வாதிகளுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் . நீட் ஒழியவேண்டும் .


jayvee
ஜூன் 01, 2024 07:50

ராஜஸ்தான் கோட்டா நம்ம ஊரு உளுந்தூர்பேட்டை மற்றும் நாமக்கல்லை போல ஒரு கல்வி தொழிற்சாலை .. இங்கு மாணவர்கள் பெருமளவில் மனசிதைவு ஏற்பட்டு கிட்டத்தட்ட மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். இது வரை வெறும் பணத்தை வைத்துமட்டுமே மருத்துவ சீட்டு வாங்கிய மருத்துவர்களை நினைத்தாலே


அப்புசாமி
ஜூன் 01, 2024 07:36

ஆன்மீக சுற்றுப்பயணம் போயிருக்காரு.


Sck
ஜூன் 01, 2024 06:00

என்னே ஒரு வளர்ப்பு?? நாடு முழுவதும் 23நாட்கள் ரயிலில் "வித்அவுட்" டிக்கட் பயணித்திருக்கிறார். அட்டடடா. அது இருக்கட்டும், ஒரு பக்கம். unreserved கம்பார்ட்மெண்ட்டில் டிக்கெட் பரிசோதகர் கிடையாதா??


வாய்மையே வெல்லும்
ஜூன் 01, 2024 08:40

அப்படி இருந்து இருந்தால் தமிழ்நாடே இன்று சுடுகாடாக மாறி இருக்காது


sankaranarayanan
ஜூன் 01, 2024 05:58

நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் ஒரே ஒரு மாணவர் நாடுமுழுவது சுற்றி திரிந்தால் என்ன ஆயிற்று. நாட்டில் எவ்வளவோ முக்கியமான செய்திகள் இருக்கும்போது இதை மிகவும் பெரிய செய்தியாக ஏன் இப்படி ஊடகங்கள் அரசியலாக்கி தங்களுக்கும் மற்றவர்களுக்கியும் கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டும்


Subramanian
ஜூன் 01, 2024 07:43

சரியான பதிவு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை