உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாவல் பழம் பறித்த மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி

நாவல் பழம் பறித்த மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி

சிக்கமகளூரு: நாவல் பழத்தை சாப்பிட ஆசைப்பட்ட 7ம் வகுப்பு மாணவன், மரத்தில் ஏறி பழம் பறித்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.சிக்கமகளூரு மாவட்டம், கடூரின் குப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 13, இங்குள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற இவர், தனது இரு நண்பர்களுடன் இணைந்து பள்ளி அருகில் உள்ள மரத்தில் நாவல் பழம் பறித்து சாப்பிட நினைத்தனர்.மூவரும் மரத்தில் ஏறினர். நாவல் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது, ஆகாஷ், குறுக்கே சென்ற மின்சார கம்பியில் தவறுதலாக கை உரசியது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதை பார்த்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், மகனை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை