மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
காடுகோடி : பைக் மீது கார் மோதியதில் ஏற்பட்ட தகராறில், கன்னத்தில் அறைந்ததால் வாலிபர் உயிரிழந்ததாக, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.பெங்களூரு காடுகோடி பெல்துார் காலனியில் வசித்தவர் பிரபுராம், 33. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு வந்தார். பைக் திடீரென பழுதானது. சாலையோரமாக நிறுத்தினார். அந்த வழியாக வந்த கார், பைக் மீது உரசியது. இதனால், காரை ஓட்டி வந்த அனில் என்பவருடன், பிரபுராம் தகராறு செய்தார்.'என் வீடு அருகே தான் உள்ளது; வீட்டிற்கு வா' என்று கூறிவிட்டு, அனில் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து அவரது வீட்டிற்கு பிரபுராம் சென்றார். அங்கு வைத்து பிரபுராம் கன்னத்தில், ஐந்து முறை அனில் பலமாக அறைந்து உள்ளார். வீங்கிய கன்னத்துடன் வீட்டிற்கு வந்த பிரபுராம், வலியால் அலறி துடித்து உள்ளார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று துாங்கினார். நேற்று காலை அவர் எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் எழுப்ப முயன்ற போது, அவர் இறந்தது தெரிந்தது. அனில் கன்னத்தில் அறைந்ததால் தான், பிரபுராம் இறந்து விட்டதாக, காடுகோடி போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago