உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம் சிறுத்தையிடம் உயிர் தப்பிய கிராமத்தினர்

வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம் சிறுத்தையிடம் உயிர் தப்பிய கிராமத்தினர்

பல்லாரி, : வளர்ப்பு நாயால், கிரேனஹள்ளி கிராமத்தினர், சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பினர்.பல்லாரி சன்டூரின் சோரநுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கிரேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஹொன்னுார சாமி. இவர் கிராமத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது வளர்ப்பு நாய், பண்ணை முன் திண்ணையில் படுத்திருந்தது.அங்கு வந்த சிறுத்தை, நாயைப் பிடிக்க முயற்சித்தது. உஷாரான நாய், சிறுத்தையிடம் இருந்து தப்பி, மின்னல் வேகத்தில், கிராமத்துக்குள் ஓடி வந்தது. தன் வீட்டுக்கு வந்தது.எப்போதும் வீட்டுக்கு வராத நாய், இன்று இவ்வளவு வேகமாக ஓடி வந்ததைப் பார்த்து, ஹொன்னுார சாமி, ஆச்சரியமடைந்தார். தனது வீட்டில் கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம், பண்ணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.அதிர்ச்சி அடைந்த அவர் கிராமத்தினரிடம் விஷயத்தைக் கூறி, பண்ணைக்கு சென்றபோது சிறுத்தையை காணவில்லை. பண்ணையில் இருந்த ஆடுகள், கிடாக்கள், எருமைகளை தாக்கவில்லை. சிறுத்தை நடமாட்டம் குறித்து, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஊழியர்களும் கூண்டு வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர்.வளர்ப்பு நாயின் எச்சரிக்கையால், கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது தெரிந்தது. மக்கள் உஷாராகினர். இல்லையென்றால் சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthoora
ஜூலை 10, 2024 08:19

இந்த பைரவனுக்கு இருக்கிற அறிவு நம்ம ஆளுங்களுக்கு இல்லை. நம்ம ஆளுங்க உடனே ஒரு மரத்தில் ஏறி வீடியோ எடுத்திருப்பாங்க, எப்படி ஆடு, மாடுகளை புலி அடிக்குது என்று.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை