மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
55 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
புனே: மஹாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில், நீர்வீழ்ச்சியில் செல்பி படம் எடுக்க முயன்றபோது, 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த, 29 வயது பெண், பத்திரமாக மீட்கப்பட்டார்.மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்த சிலர், சடாரா மாவட்டம் போர்னே காட் பகுதியில் மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு தோஷேகார் நீர்வீழ்ச்சியில், அந்த குழுவைச் சேர்ந்த, 29 வயது பெண், செல்பி எடுக்க முயன்றார். மழை பெய்து கொண்டிருந்ததால், பாறையில் வழுக்கி, 100 அடி பள்ளத்தில் அவர் விழுந்தார்.உடன் வந்த மலையேற்றக் குழுவினர் மற்றும் போலீசார் இணைந்து கயிறு கட்டி, அந்த பெண்ணை மீட்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மஹாராஷ்டிராவின் ராய்கடில் கும்பே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற, 26 வயது, சமூக வலைதளப் பிரபலம், பள்ளத்தில் விழுந்து சமீபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சுற்றுலா தலங்களில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, சுற்றுலா துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
55 minutes ago
1 hour(s) ago