மேலும் செய்திகள்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஒரு நாள் பயிலரங்கம்
3 hour(s) ago
இன்றைய மின் தடை
3 hour(s) ago
கான்பெட் நிறுவனத்தில் பட்டாசு கடை இன்று திறப்பு
3 hour(s) ago
கொம்பாக்கம் பகுதியில் நாளை குடிநீர் கட்
3 hour(s) ago
கோரமங்களா, : பீஹாரைச் சேர்ந்தவர் க்ருதி குமாரி, 24. இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கோரமங்களாவின் வி.ஆர்., லே -- அவுட்டில் உள்ள, மகளிர் தங்கும் விடுதியில் வசித்தார்.இவர் நேற்று முன் தினம் இரவு, உணவருந்திய பின் உறங்கச் சென்றார். 11:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் விடுதிக்குள் புகுந்து மூன்றாவது மாடிக்குச் சென்று, அறையில் படுத்திருந்த க்ருதி குமாரியை, கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். க்ருதி குமாரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் உதவிக்கு வருமுன், மர்ம நபர் தப்பியோடிவிட்டார். தகவலறிந்து அங்கு வந்த கோரமங்களா போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.தனக்கு அறிமுகமுள்ள நபரால், க்ருதி குமாரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.மகளிர் தங்கும் விடுதிக்குள் நுழைந்து, இளம்பெண்ணை கொலை செய்த மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.மகளிர் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா, சுற்றுப்பகுதி சாலைகளில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்கின்றனர். கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago