உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்த வச்சிட்டியே பரட்ட... ஆம் ஆத்மி கொண்டாட்டத்தால் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்!

பத்த வச்சிட்டியே பரட்ட... ஆம் ஆத்மி கொண்டாட்டத்தால் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்கும் விதமாக, அவரது வீட்டின் முன் ஆம்ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

டில்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது.

ஜாமின்

இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், கெஜ்ரிவாலின் மனுவை ஏற்று, அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஜாமினில் வெளியே செல்லும் கெஜ்ரிவால் வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர். 5 மாதங்களுக்குப் பிறகு வெளியே வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில், தடையை மீறி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே பட்டாசு வெடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், 'சட்டத்தை மீற மாட்டேன்' என்று உத்தரவாதம் கொடுத்து ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பட்டாசு வெடித்து சட்டத்தை மீறியதாக, போலீசார் புகார் செய்தால், அவரது ஜாமினுக்கும் சிக்கல் என்கின்றனர், வக்கீல்கள்.எதிர்வரும் குளிர்காலத்தையொட்டி, காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக, பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும் டில்லி அரசு கடந்த திங்கட்கிழமை தடை விதித்து உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது, அந்தத் தடையை மீறியதாக, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

P Sundarrajan
செப் 16, 2024 07:51

டெல்லி அரசு என்றால் ஆம்ஆத்மி அரசு தானே


Tetra
செப் 15, 2024 15:19

ஏம்பா நம்ம பொன்முடி, வழக்கை பாத்துமா நீதியை நம்ப முடியாது


Selvaraj
செப் 15, 2024 12:44

வழக்கறிஞர்கள் கோடி கோடியாக பணம் வாங்க வாதாடுகிறார்கள். நீதிபதிகள் அவற்றை கேட்டு தங்கள் மனசாட்சியின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுத்தால் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு ஓரளவுக்காவது அச்சம் வரும். இப்போது அத்தகைய சீனியர் லாயர்களைப் பார்த்து நீதிபதிகளே ஊழல்வாதிகளை வெளியில் விடுவது சரியா.


M R Sampath
செப் 15, 2024 09:11

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ள வரை ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை


M R Sampath
செப் 15, 2024 09:06

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி வாதாடும் கபில் சிபல், சிங்வி போன்ற வழக்கறிஞர்கள் உள்ளவரை ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க வாய்ப்பே இல்லை.


venugopal s
செப் 15, 2024 06:50

பாஜக ஆட்சியில் நீதிமன்றங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை,


R.Varadarajan
செப் 15, 2024 02:40

சுதந்திரப்போராட்ட வீரரா விடுதலைக்கு விழா எடுக்க?


Azar Mufeen
செப் 15, 2024 00:01

பூசனை கைது செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்களே, மோடி அரசின் மீது உங்களுக்கு வெறுப்பு வரவில்லையா


கிஜன்
செப் 14, 2024 21:22

இவரோட நேர்மைக்காக ....அன்னா ஹசாரே .... புறா ல்லாம் பறக்க விட்டாரு.... இவரு இப்போ சிபு சோரான .... அன்பு நண்பா என்று கொஞ்சுகிறார்....


Balasubramanian
செப் 14, 2024 20:09

பட்டாசு தீபாவளிக்கு வெடிக்க கூடாது! தசரா ராம் லீலா வில் வெடிக்க கூடாது! மற்றபடி படி அரசியல் கூட்டம், தேர்தல் வெற்றி தலைவர்கள் உற்சாக வரவேற்பு, கிரிக்கெட் ஜெயிப்பது போன்ற சாதாரண நிகழ்ச்சிகளில் வெடிக்க தடை இல்லை என்று முதல்வராக அவசர சட்டம் போட்டு கோப்பில் உடனடியாக கையொப்பம் இடுங்கள்! ஜாமீன் நிபந்தனையை மீறிய கேஸ் வந்தால் அதற்கும் ஏதாவது சட்ட நுணுக்கம் ஓட்டை வழி இல்லாமல் போகாது


சமீபத்திய செய்தி