உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா தேர்தலில் திருப்பம் ஆம் ஆத்மி தனித்து போட்டி

ஹரியானா தேர்தலில் திருப்பம் ஆம் ஆத்மி தனித்து போட்டி

சண்டிகர்,ஹரியானா சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள ஆம் ஆத்மி, முதற்கட்டமாக 20 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஹரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, ஹரியானாவிலும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. இது தொடர்பான பேச்சு கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. அதிக தொகுதிகளை ஆம் ஆத்மி கோரியதை அடுத்து, இருதரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே, கூட்டணி குறித்து நேற்று மாலைக்குள் அறிவிக்கும்படி, ஆம் ஆத்மி தரப்பில் காங்கிரசிடம் தெரிவிக்கப்பட்டது. எந்த பதிலும் வராததை அடுத்து, தனித்து போட்டியிட முடிவு செய்த ஆம் ஆத்மி, முதற்கட்டமாக 20 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ