உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாமிர சுரங்கத்தில் விபத்து லிப்டில் சிக்கி அதிகாரி பலி

தாமிர சுரங்கத்தில் விபத்து லிப்டில் சிக்கி அதிகாரி பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; பல மணி போராட்டத்துக்குப் பின், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது.ஆய்வுகடந்த 1967 முதல் செயல்பட்டு வரும் இந்த சுரங்கத்தில், தாமிரம் எடுக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தது.இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் இருந்து வந்த மூத்த விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர பாண்டே தலைமையிலான குழுவினர் இந்த சுரங்கத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.சுரங்கத்தில் சோதனை மேற்கொண்டதை அடுத்து, அங்கிருந்து 15 பேர் அடங்கிய குழுவினர் லிப்ட் ஒன்றில் மேல் நோக்கி பயணித்தனர்.அப்போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்த சங்கிலி அறுந்ததில் லிப்ட் கீழே விழுந்து 2,000 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை மீட்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரின் முயற்சியில் முதற்கட்டமாக, மூன்று பேரும், அடுத்ததாக ஐந்து பேரும் நேற்று முன்தினம் இரவே மீட்கப்பட்டனர். எலும்பு முறிவு மற்றும் பல்வேறு காயங்களுடன் அவதிப்பட்ட அவர்கள் அனைவரும் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.விசாரணைபல மணி நேர போராட்டத்துக்குப் பின் ஆறு பேர் பத்திரமாக நேற்று காலை மீட்கப்பட்டனர். இருப்பினும், குழுவில் இருந்த மூத்த விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திரா பாண்டே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை