உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 12 நக்சல்கள் சுட்டுக்கொலை சத்தீஸ்கரில் அதிரடி

12 நக்சல்கள் சுட்டுக்கொலை சத்தீஸ்கரில் அதிரடி

பிஜப்பூர், சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.சத்தீஸ்கரில் உள்ள 11 லோக்சபா தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பிஜப்பூர் மாவட்டத்தின் காங்களூர் அருகே உள்ள வனப்பகுதியில், நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், எல்லை பாதுகாப்பு படையினர் உட்பட மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பீடியா என்ற பகுதி அருகே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். தாக்குதலில் பலியான நக்சல்களின் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.கடந்த மாதம் 16ம் தேதி, கான்கேர் மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சல்களும், இதேபோல் கடந்த மாதம் 30ம் தேதி நாராயண்பூர் எல்லை அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 10 நக்சல்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை