மேலும் செய்திகள்
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி
1 hour(s) ago
ஜோஹோ மெயிலுக்கு மாறினார் அமித் ஷா
1 hour(s) ago
முதல்வர் வேட்பாளர் நிதிஷ்!
1 hour(s) ago
பெங்களூரு: கர்நாடகாவில் ஊழலில் ஈடுபட்டு வந்த, 11 முன்னாள் மற்றும் இன்னாள் அதிகாரிகளின் 56 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதிகாலையே களமிறங்கி நடத்திய இந்த சோதனையில், பணம், தங்க நகைகள், சொத்துக்கள் என, 45.14 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின. ஊழல் செய்யும் அதிகாரிகள் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி, லோக் ஆயுக்தா போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனாலும், அதிகாரிகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள், ஊழல் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தொடர்பாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.அடிக்கடி புகார்கள் வந்த அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களின் வீடு, அலுவலகம், உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடுகள் போன்ற விபரங்களை சேகரித்தனர்.* யார், யார்?அந்த வகையில், பெங்களூரு மாநகராட்சி கெங்கேரி மண்டல வருவாய் அதிகாரி பசவராஜ் மாகி; மாண்டியாவில் கிராமப்புற குடிநீர், வடிகால் வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவராஜு; பெங்களூரு சிறிய நீர்ப்பாசன துறை முதன்மை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவீந்திரா.தார்வாட் அரசு திட்டங்களின் இயக்குனர் சேகர் கவுடா; பெலகாவி உதவி செயற்பொறியாளர் மஹாதேவ் பன்னுார்; தாவணகெரே செயற்பொறியாளர் உமேஷ்; உதவி செயற்பொறியாளர் பிரபாகர்; கோலார் தாசில்தார் விஜியண்ணா.மைசூரு தலைமை பொறியாளர் மஹேஷ்; ஹாசன் முதல் நிலை செயலர் என்.எம்.ஜெகதீஷ்; சித்ரதுர்கா சூப்பிரண்டு கே.ஜி.ஜெகதீஷ் ஆகிய 11 அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் இவர்களுக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என 56 இடங்களில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, லோக் ஆயுக்தா போலீசார் அதிரடியாக புகுந்தனர். ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த அதிகாரிகள், லோக் ஆயுக்தா போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.* அதிகாலை அதிர்ச்சிஅடையாள அட்டையை காண்பித்தும், சோதனைக்கான வாரன்டை காண்பித்தும் வீடுகளுக்குள் சென்ற போலீசார், ஒவ்வொரு மூலையையும் விடாமல் சோதனை நடத்தினர். வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு, என்ன நடக்கிறது என்று தெரியாமல், 'ஷாக்' அடித்தது போன்று ஆகிவிட்டனர்.பீரோ, லாக்கர், மெத்தை, பைகள், சூட்கேஸ்கள் என ஒரு இடத்தையும் விடாமல் தீவிர சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட மாவட்ட லோக் ஆயுக்தா எஸ்.பி., கண்காணிப்பில், ஒரே நேரத்தில் 100 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.நேற்று நடந்த சோதனையில், பெங்களூரு மாநகராட்சி கெங்கேரி மண்டல வருவாய் அதிகாரி பசவராஜ் மாகியின் கலபுரகி வீடு, கே.ஆர்.புரம் வீட்டில் தான் அதிகபட்ச விலை உயர்ந்த பொருட்கள் சிக்கின.* நாணயங்கள், புலி நகம்அதாவது கலபுரகி வீட்டில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சூதாட்ட கேசினோ நாணயங்கள் கொண்ட ஒரு சூட்கேஸ்; மற்றொரு சூட்கேசில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேசினோ நாணயங்கள் இருந்தன. அதிகாரியின் வீட்டில் இந்த நாணயங்கள் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இது மட்டுமின்றி, இரண்டு புலி நகங்களும் மீட்கப்பட்டன. இதன் உண்மை தன்மையை கண்டறிய, வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து உறுதி செய்து கொள்ளப்பட்டது. மேலும், முறைகேடாக சம்பாதித்த பணத்தில், தன் தாய் பெயரில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.மாண்டியாவில் கிராமப்புற குடிநீர், வடிகால் வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவராஜு, தற்போதைய விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமியின் நெருங்கிய உறவினர். ஆரம்பகால பள்ளியில், இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.* தங்க நகைகள்தாவணகெரே செயற்பொறியாளர் உமேஷ் வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து அதிகாரிகளின் வீடுகளிலும் கணக்கில் காட்டப்பட்டாத கட்டு கட்டான ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து பத்திரங்கள் என, 45.14 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின. அனைத்து அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்....பாக்ஸ்...யார் யாரிடம் எவ்வளவு சிக்கியது?பெயர் கணக்கில் காட்டப்படாத சொத்து விபரம்மஹாதேவ் பன்னுார் 97,51,648உமேஷ் 5,38,00,000பிரபாகர் 2,01,47,391சேகர்கவுடா 7,88,26,644ரவீந்திரா 5,75,55,000கே.ஜி.ஜெகதீஷ் 5,26,41,302சிவராஜு 5,08,38,000விஜியண்ணா 2,45,46,000மஹேஷ் 3,79,00,000என்.எம்.ஜெகதீஷ் 3,22,68,000பசவராஜ் மாகி 3,31,70,830மொத்தம் 45,14,44,815***
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago