உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டயாலிசிஸ் அறையில் கிரிக்கெட் ஆடிய மருத்துவ அதிகாரி, நர்ஸ் மீது நடவடிக்கை

டயாலிசிஸ் அறையில் கிரிக்கெட் ஆடிய மருத்துவ அதிகாரி, நர்ஸ் மீது நடவடிக்கை

துமகூரு: அரசு மருத்துவமனையின் டயாலிசிஸ் மையத்தில் கிரிக்கெட் விளையாடிய, மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி, பெண் செவிலியர் உட்பட மூவர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.துமகூரு மாவட்டம், மதுகிரியில் உள்ள அரசு மருத்துமனையின் டயாலிசிஸ் மையத்தில், சமீபத்தில் அதன் தலைமை மருத்துவ அதிகாரி லதேஷ் குமார், செவிலியர் ஹர்ஷவர்தன் ஆகியோர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதை, செவிலியர் திவ்யா தன் மொபைல் போனில் வீடியோ பிடித்துள்ளார்.நோயாளிகளின் விபரங்கள் எழுதும் நோட்டை, 'பேட்டாக' பயன்படுத்தி, பிளாஸ்டிக் பந்தை வைத்து, மருத்துவமனை சீருடையுடன் விளையாடுகின்றனர். இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அதில், 'அரசு பணியை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்கள் போன்று மருத்துவமனை அறையில் விளையாட கூடாது. மருத்துவமனையை விளையாட்டு மைதானமாக மாற்றிய இவர்கள், பொது சுகாதார சேவைக்கு தகுதியவற்றவர்கள்' என குறிப்பிட்டு உள்ளனர்.இது குறித்து, மாவட்ட சுகாதார அதிகாரி மஞ்சுநாத் கூறுகையில், ''மதுகிரி அரசு மருத்துவமனையின் டயாலிசிஸ் ஊழியர்கள், தங்கள் பணியை கவனிக்காமல், கிரிக்கெட் விளையாடி உள்ளனர். ''எனவே, லதேஷ் குமார், ஹர்ஷவர்த்தன், திவ்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டயாலிசிஸ்க்கு வேறு ஊழியர்களை நியமிக்கவும் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை