உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி விவகாரம்; செபி தலைவர் மாதவி அக்., 24ல் ஆஜராக சம்மன்

அதானி விவகாரம்; செபி தலைவர் மாதவி அக்., 24ல் ஆஜராக சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில், அக்.,24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராகுமாறு பார்லிமென்ட் பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. 'அதானி' குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால், இவையனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார். மாதவி புரி புச், விதிகளை மீறி, 2017 - 2022 ஆண்டுகளுக்கு இடையில் தன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக, புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றச்சாட்டு

அதுமட்டுமன்றி, அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதவி பங்குகளை வைத்திருப்பதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் மாதவி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தது.

சம்மன்

இது தொடர்பாக, விளக்கம் அளிக்க, அக்.,24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராகுமாறு பார்லிமென்ட் பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதானி குழுமம் குறித்து, ஹிண்டன் பர்க் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய போது பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, செபி தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால், மீண்டும் பிரச்னை தலைதூக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
அக் 05, 2024 16:19

இதுக்கு முன்னாடி கையும்.களவுமாக பிடிபட்ட சித்ரா ராமகிருஷ்ணாவையே ஒண்ணும் பண்ண முடியலை. இவர் இன்னும் பழுத்தவர். அங்கங்க ஆள் வெச்சி, துட்டு வெட்டி கேசையே அமுக்கிருவாங்க.


நசி
அக் 05, 2024 15:20

இதே மாதிரி‌கனிமொளி‌ ராசா‌, ராகல் , ஜி‌ஸ்கொயர்‌சபரிசன் செந்தில் பொன்முடி‌ ஸ்டாலினையும்‌ விசாரிக்கவும்


ஆரூர் ரங்
அக் 05, 2024 14:13

கீழ்மட்ட அதிகாரிகளிடம் நேர்மையாகவும் கடுமையாகவும் நடந்து கொள்ளும் நிறுவனத் தலைவர்கள் எல்லோரும் சந்திக்கும் சவால்தான். அதிலும் ஒரு பெண்ணின் தலைமையை பரந்த மனப்பான்மையுடன் ஏற்று செயல்படுவது சிலரால் மட்டுமே இயலும். மீண்டு வருவார். (NIFTY பங்குச் சந்தையில் எந்த அடானி நிறுவனமும் டாப் 10 ல் இல்லை. )


GMM
அக் 05, 2024 14:00

ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் முதலில் விசாரிக்க பட வேண்டும். திராவிட, காங்கிரஸ் நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டவை என்று உறுதி சொல்ல வேண்டும். அதானியின் சட்ட விரோத முதலீடு நிறுவனம் / போலி நிறுவனம் இருக்க முடியாது. முதலில் நிரூபித்து மூட வேண்டும். இரு நாட்டையும் கேவல படுத்தும் முயற்சி. மாதவி முதலீடு கூடாது என்றால், ராகுல் மற்றும் காங்கிரஸார் முதலீட்டை பறிமுதல் செய்யலாமா? செபி தலைவர் ஆஜராக கூடாது. பங்கு சந்தையை முடக்க சதி? பங்கு சந்தை பொது கணக்கில் வராது. அப்படி என்றால் வரி விலக்கு பெறும் தொண்டு நிறுவனங்கள் பொது கணக்கில் வர வேண்டும். பொது கணக்கு என்றால் என்ன வென்று தெரியாதவர் தலைவர்? சம்மன் என்றால் என்ன? யார் யாரெல்லாம் சம்மன் அனுப்ப முடியும் என்று விதி இருக்கும். காலப்போக்கில் அரசு அலுவலக கடை நிலை ஊழியர் சம்மன் அனுப்ப துணிவர். இஷ்டம் போல் நீதி, நிர்வாகம். அதாவது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.


பாமரன்
அக் 05, 2024 12:44

இது வரை இந்த குழுக்கள் விசாரணை மூலம் எதாவது நடவடிக்கைகள் இருந்திருக்கா...?? சும்மா கும்பலா உக்கார்ந்து பகோடா பஃப்ஸ் டீ சாப்பிட்டுட்டு வெளிவந்த உடனே என்னை மதிக்கலைன்னா ஒரு உறுப்பினர்... யாரு எதிரிகட்சி ஆள்தான் மடை மாற்றிட்டு போயிடுவாப்ல... அவர் கையிலும் ஸ்வீட் பாக்ஸ் இருந்ததை கண்டுக்காம மீடியாக்கள் சில மணிநேரம் ஃப்ளாஷ் நியூஸ் போடும் வேறு கிளுகிளுப்பு டாபிக் கிடைக்கலன்னா ராத்திரி குரூப் டிஸ்கிஸ் பண்ணுவாங்க... வேறென்ன இதுவரை கண்டோம்... போங்க போங்க...


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 11:27

சட்டத்துக்கு மேலாக யாருமில்லை ...... தன்னை நிரூபித்து வெளிவரட்டும் ......


Srinivasan Krishnamoorthi
அக் 05, 2024 11:05

மாதவி பேச்சு கொஞ்சம் அராத்து போல் இருக்கும். விதி மீறல் இருப்பதாக தெரிய வில்லை.


Lion Drsekar
அக் 05, 2024 09:32

சம்மன் மற்றும் ஆஜருக்கு, அனைவரும் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் வீட்டுக்கு ஒருவர் என்காவது ஒரு நிலையில் ஆஜராகிக்கொண்டு வருகின்றனர், வந்தே மாதரம்