உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிநவீன நீர்மூழ்கி குண்டு சோதனை அபார வெற்றி

அதிநவீன நீர்மூழ்கி குண்டு சோதனை அபார வெற்றி

பாலசோர், நம் கடற்படைக்கான, நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய, ஏவுகணை உதவியுடன் செலுத்தப்படும் அதிநவீன நீர்மூழ்கி குண்டு சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நம் கடற்படைக்காக, அதிநவீன நீர்மூழ்கி குண்டு தயாரிக்கும் முயற்சியில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது. 'ஸ்மார்ட்' என்று அழைக்கப்படும், அதிவேகத்தில் செல்லக்கூடிய, 'சூப்பர்சோனிக்' ஏவுகணையால் இயக்கப்படும், 'டார்பிடோ' எனப்படும் நீர்மூழ்கி குண்டு சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று நடந்தது.கடலுக்கடியில் உள்ள எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை, கடலுக்குள் சீறிப் பாய்ந்து சென்று அழிக்கும் திறன் உள்ளது இந்த நீர்மூழ்கி குண்டு. ஏவுகணை வாயிலாக அனுப்பப்படுவதால், இதன் வேகம் மற்றும் துல்லியம் மேலும் சிறப்பானதாக இருக்கும்.கடலுக்கடியில் தனியாக பிரிந்து செல்லுதல், பாராசூட் வாயிலாக அனுப்புதல் என, பல அதிநவீன வசதிகளுடன் இந்த நீர்மூழ்கி குண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் குண்டுகளில் புதிய வகையாகும்.இந்த சோதனை மிகவும் வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ., குறிப்பிட்டுள்ளது. இந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்