உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அத்வானி டிஸ்சார்ஜ்

அத்வானி டிஸ்சார்ஜ்

புதுடில்லி, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, 96, கடந்த 26ல் சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்த நாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.இந்நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலை சீரடைந்தது. இதையடுத்து, நேற்று மாலை அவர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அத்வானி உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை