உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பருவமழையை எதிர்கொள்ள பல்துறைகளுக்கு அறிவுரை

பருவமழையை எதிர்கொள்ள பல்துறைகளுக்கு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் குறித்து, தலைமை செயலர் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.இதில், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், பல்வேறு துறை செயலர்கள், காவல் துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் தலைமை செயலர் வழங்கிய அறிவுரைகள்:சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கலெக்டர்கள், மண்டல அளவில் பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதில், ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும்.குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்சென்னை வடி நிலப் பகுதிகளில் நடந்து வரும், பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும், அக்., 15க்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்அனைத்து முதல்நிலை மீட்பாளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அவர்களை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள், பருவமழை துவங்கும் முன்னரே, பாதிப்புக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்பருவ மழை துவங்கும் முன்பே, மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்அனைத்து வானிலை வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில், பகுதி வாரியான வானிலை தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vbs manian
செப் 15, 2024 09:01

வானிலை மையத்தை குறை கூற வேண்டாம். மற்றபடி எல்லாம் வழக்கம் போல் நடக்கும்.


Palanisamy Sekar
செப் 15, 2024 06:55

அதெல்லாம் எங்களுக்கில்லை . அறிவுரை சொல்லும் அளவுக்கு திராவிடியா ஆட்சி ஒன்றும் தாழ்ந்துவிடவில்லை. ஒரே ஓர் சொட்டு மழை நீர் தேங்கியதாக காட்டமுடியுமா என்று சவால்விட்டு சென்ற மந்திரி முதலமைச்சர் பட்டபாடு சொல்லி மாளாது. நாலாயிரம் கோடி ஏப்பம் விட்ட ஆட்சியாளர்கள் இன்னும் கூச்சமே இல்லாமல் மீண்டும் ஐந்தாயிரம் ஒதுக்கி அணைத்து பணிகளையும் முடித்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். செவிடன் காதில் ஊதிய சங்குக்கு சமம் இந்த அறிவுரைகள்


Kasimani Baskaran
செப் 15, 2024 06:16

கூட்டம் நடத்தி விளம்பரப்படுத்துவதால் வரும் பயனை விட வேலை செய்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு எத்தனை சதவிகிதம் வேலை முடிந்தது என்ற அறிவிப்புக்கு நடந்த வேலைக்கும் நேரடி உறவு இருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை