உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பாசக்கார மகன்: குவிகிறது பாராட்டு

தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பாசக்கார மகன்: குவிகிறது பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி: காதில் வெட்டு காயம் அடைந்த தந்தையை காப்பாற்ற, அரசு மருத்துவமனையில் டிரைவர் இல்லாததால், மகனே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார். தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டிய மகனை, ஜன்வாடா கிராமத்தினர் பாராட்டுகின்றனர்.கர்நாடகா மாநிலம், பெலகாவி சிக்கோடி ஜன்வாடா கிராமத்தில் வசிப்பவர் சித்து பூஜாரி, 47. விவசாயி. இவருக்கும், இவரது மனைவி குடும்பத்தினருக்கும் நேற்று காலை தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் சித்து பூஜாரி, காதில் வெட்டு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, சடலகா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காதில் தையல் போட்டும் ரத்தம் நிற்கவில்லை. இதனால் சிக்கோடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, டாக்டர்கள் கூறினர்.சடலகா அரசு மருத்துவமனை முன் நின்ற, ஆம்புலன்சில் சித்து பூஜாரியை அனுப்பும்படி, உறவினர்கள் கேட்டனர். ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்லை என, டாக்டர்கள் கூறினர்.அப்போது அங்கு இருந்த சித்து பூஜாரி மகன் மல்லு பூஜாரி, 22, 'எனக்கு வாகனம் ஓட்டத் தெரியும். நான் ஆம்புலன்சில் தந்தையை அழைத்துச் செல்லவா?' என, டாக்டர்களிடம் கேட்டார். டாக்டர்களும் ஒப்புக் கொண்டதால், சித்து பூஜாரியை ஆம்புலன்சில், சிக்கோடி அரசு மருத்துவமனைக்கு மல்லு பூஜாரி அழைத்துச் சென்றார். தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டிய மகனை, ஜன்வாடா கிராமத்தினர் பாராட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
ஜூன் 01, 2024 23:54

வெளி ஆள் ஆம்புலன்ஸை ஓட்ட அனுமதித்தற்கு டாக்டர்கள் மேல் நடவடிக்கை பாயாமலிருக்கணும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2024 23:31

இன்றைய ஒரு மன்னர் அந்நாளைய மன்னராக இருந்த தனது தந்தையின் கழுத்தை அல்லவா பிடித்தார் .....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 01, 2024 19:45

ஆம்புலன்ஸ் இருக்கு டிரைவரை காணோம் இது ஏன் என்று யாருமே கேட்கவில்லையா?


Ramesh Sargam
ஜூன் 01, 2024 18:43

பாசக்கார மகன். வாழ்க நீடூடி. ஆமாம், இதுபோன்ற செய்திகளில், கடைசியில் வழக்கம்போல வரும் "... போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்" என்று வருமே. அந்த வரிகள் ஏன் இல்லை? வழக்கு பதிவு செய்யப்படவில்லையா?


vijai
ஜூன் 01, 2024 18:21

இதுல என்ன பாராட்டுவதற்கு டிரைவிங் தெரிஞ்சா இதை தரலாமா செய்யலாமே ஒரு மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை இது


rama adhavan
ஜூன் 01, 2024 20:50

மனித நேயம், துணிவு, சமயோகித புத்தி, மனித இதயம் இல்லாதவர் இப்படித்தான் கருத்து போடுவார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை