உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.நாடு முழுவதும் சுட்டெரித்து வரும் வெப்ப அலை குறித்தும், ரேமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மிசோரம், அசாம், மணிப்பூர் மற்றும் மேகலாயா மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார். ஆலோசனையில் வட கிழக்கு மாநிலங்களில் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும், மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூன் 02, 2024 18:41

மழையே இல்லாமல், குடிக்கும் தண்ணீருக்கே அவதிப்படும் மாநிலங்களுக்கும் நீங்கள் உதவேண்டும் பிரதமரே.


கிட்டு
ஜூன் 02, 2024 18:11

வெள்ளம் வந்து போய் அடுத்த வெள்ளத்துக்கு ரெடியாயிட்டு வர்ரோம். இதுல இவுரு இப்பத்தான் தியானத்திலேருந்து எழுந்திரிச்சு... அந்த கன்னியாகுமரி அம்மன் தான் தமிழகத்ததை காப்பாத்தணும்.


venugopal s
ஜூன் 02, 2024 17:19

ஆம்,தமிழ்நாட்டுக்கு உதவியது போல் உதவுவார்!


hari
ஜூன் 02, 2024 21:52

எதுக்கு.. அதையும் கட்டுமரம் ஆட்டைய போடும்..... உனக்கு 200 ரூபாய் வந்தா போதும்னு கருத்து போடாதே


Kannan Sethu
ஜூன் 02, 2024 16:30

தியானம் டு நிதானம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ