உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் சொல்கிறது ஏர் இந்தியா: வெளுத்து வாங்கினார் பாடகர் ரிக்கி கேஜ்

பொய் சொல்கிறது ஏர் இந்தியா: வெளுத்து வாங்கினார் பாடகர் ரிக்கி கேஜ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஏர் இந்தியா விமான சேவை மீது, 3 முறை கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர்

பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், இன்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதற்காக, விமான நிலையம் வந்த அவர், அங்கு காத்திருந்துள்ளார். அப்போது, பிசினஸ் வகுப்பு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரிக்கி கேஜை, எகானமி வகுப்பில் பயணிக்குமாறு கூறிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர், அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவமரியாதை

இதனால், ஏற்பட்ட விரக்தியை எக்ஸ் தளத்தில் ரிக்கி கேஜ் வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில், 'இந்த ஓராண்டில் 3வது முறையாக எனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிசினஸ் வகுப்பில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். பெங்களூரூ செல்வதற்காக, மும்பை விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கு கவுண்டரில் இருந்த நிஷிதா சிங் என்ற ஊழியர், என்னை எகானமி வகுப்பில் செல்லுமாறு கூறியதுடன், அவமரியாதையுடன் நடந்து கொண்டார். தங்களின் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை ஏர் இந்தியா நிறுவனம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் தற்போதும் விமான நிலையத்தில் தான் இருக்கிறேன். ஆனால், காலை 9.25 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்று விட்டது, எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட தனக்கு எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்றும், இதற்காக தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சுத்தப்பொய்

அவரது பதிவுக்கு பதிலளித்திருந்த ஏர் இந்தியா நிறுவனம், உங்களுக்கான தீர்வை வழங்குவது பற்றி மெசேஜ் செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும், சமூகவலைதளத்தில் ஏர் இந்தியா நிறுவனம் பொய் சொல்வதாக ரிக்கி கேஜ் பதில் பதிவு போட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஆக 03, 2024 23:28

ஏர் இந்தியா விஷயத்தில் டாடா கூட வெற்றி பெற முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட ஏர் இந்தியா விமானத்தை தவிர்க்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மை!


Edi Shivaji
ஆக 03, 2024 21:22

இது மாதிரி செய்திகளை எல்லாம் பிரசுரிக்க கூடாது. சில சமயம் இது மாதிரி சில சில பிரச்சினைகள் விமான போக்குவரத்தில் எழுவது சகஜமே. ஏர் இந்தியாவில் மட்டும் நிகழ்வதாக கூறமுடியாது. பிசினஸ் வகுப்புக்கு பதிலாக எக்கனாமி வகுப்பில் இந்த பாடகர் சென்று இருக்கிறார். அதற்காக ஏர் இந்தியா நட்ட ஈடு தர கேட்கலாம். எல்லா ஏர் கமபனிகளும் அப்படி ஒன்றும் தருவதில்லை. என்ன குடி முழிகிவிட்டது என்று புரியவில்லை. எதற்காக இந்த குயோ முய்யோ?


Barakat Ali
ஆக 03, 2024 21:00

டாட்டாவால் நடத்தப்படும் ஏர் இந்தியா நிறுவனம் குறிவைத்துத் தாக்கப்படுகிறது .........


K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:30

நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் ஐயா செய்தித்தாள்களில் வந்தால் தான் அடங்குவார்கள், இவர்களின் பொய்களை நாடு முழுதும் பரப்ப வேண்டும், அப்போதுதான் பயணிகள்தான் உண்மையான எஜமானர்கள் என்பதை உணர்வார்கள்.


Columbus
ஆக 03, 2024 19:28

May be a case of overbooking.


ஸ்ரீ ராஜ்
ஆக 03, 2024 18:36

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள். அவர்கள் அவமானப்படுத்துவார்களாம், நாங்கள் Consumer கோர்ட் போய் நீதி கேட்டு, இழப்பீடு பெறவேண்டுமாம்.. அவர் இழந்த மனஅமைதிக்கு உங்களால் மதிப்பிட முடியுமா?


Anantharaman Srinivasan
ஆக 03, 2024 17:00

யார் சொல்லுவது பொய் என்று public க்கு தெரிய வாய்ப்பில்லை. உண்மையில் ஏர்இந்தியா தவறு செய்திருந்து பயணி அவமதிக்கப்பட்டிருந்தால் Consumer commission சென்றால் Compensation பெறலாம்.


மேலும் செய்திகள்