உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது அணை கட்ட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழகத்திடம் என்னுடைய ஒரே கோரிக்கை. மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இந்த அணையால் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலமும் சரிசமமாக பலனடையும். இரண்டு மாநிலங்களின் செழிப்புக்கும் இந்த நடவடிக்கை அவசியம். மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகம் பச்சைக் கொடி காட்டி, பிராந்தியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

சிங்கை பாலு
ஆக 15, 2024 09:52

நீங்கள் நிச்சயமாக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் அணை கட்டாவிட்டால். எங்களுக்கு மிகவும் கோபம் வரும்.


baskaran A.C
ஆக 12, 2024 20:38

300 கோடி kudu திட்டு டாம் கட்டிக்கோ


tmranganathan
ஆக 07, 2024 08:03

சிவா தமிழகத்தில் கொடுக்கவேண்டியதை மேலிடத்துக்கு கொடுத்து விட்டு அணையை கட்டிக்க ஏற்பாடு செய்யுங்கோ. மறக்கவேண்டாம். சில்லறையை தூக்கி podungo...


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 07:11

நீங்க பெங்களூருக்கு தண்ணி விடறோம்ன்னு சொல்லி ஹொகேனக்கல் க்கு விட்டா மாதிரி மிஸ்டர் சத்தமில்லாம உங்களுக்கு அனுமதி தந்திடுவாரு, அப்போ இங்கே எழுதிய மக்களின் மனவோட்டத்தை நான் அறிய முயல வேண்டும்


karutthu
ஆக 01, 2024 18:39

இந்த சிவகுமார் அன்று காவேரிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என கூறியவர் இப்போ மேகதாது ஆணை கட்ட அனுமதி கேட்கிறார் . மேகதாது அணைகட்ட அனுமதி தரக்கூடாது .இது பற்றி அமைச்சர் துரை முருகன் அவர்களுக்கு நன்றாக தெரியும் .இந்த விஷயத்தில் மேகதாது அணைகட்ட அனுமதி தரக்கூடாது .


Anvar
ஆக 01, 2024 07:23

தயவு செய்து கட்டிக்கோங்க .. இவனுக கொடுக்கற தண்ணி எல்லாத்தையும் கடல்ல விட்டுட்டு எதையும் இம்சித்து வைக்காம அப்புறம் நீங்க இம்சித்து வைத்ததை கொடுங்கன்னு கேட்பானுக .. 85% சதவீத தண்ணி கடல்லதான் வீணாகுது .. ஒரு பைசாக்கு பிரயோஜனம் இல்லை .. நீங்க கட்டிக்கோங்க தயவுசெய்து கட்டிக்கோங்க பெங்களூரு ல மக்கள் தண்ணி இல்லாம ரொம்ப கஷ்டம்


visu
ஜூலை 26, 2024 08:50

ரொம்ப சுலபம் எவ்வளவு அணைகள் வேண்டுமானாலும் கட்டட்டும் ஆனால் நதிகள் அணைகள் தேசியமயமாக்க படவேண்டும் கட்டுப்பாடு மத்திய அரசிடம் அளிக்க படவேண்டும்


sankaran
ஜூலை 24, 2024 15:33

இப்பதான் கடந்த 5 அல்லது 6 வருஷமா காவேரி பிரச்னை விஷயமா மோதல் இல்லை.. உச்ச நீதி மன்றத்துக்கு நன்றி... திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க... முன்பு முக தமிழக மக்களை பின்னால் குத்தினார்.. அவரது மகன் சுடாலின் நம்மை குத்தாமல் பாத்து காது கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்ற அங்கே திருவள்ளுவர் சிலை..இங்கே கன்னட கவிஞர் சிலை.. தமிழக மக்கள் ஏமாற தயாராக இருந்தால் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. திமுக தன்னுடைய சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்..


shanmugam p
ஜூலை 24, 2024 22:05

காவிரி ஆற்றின் பிரச்சினைக்கு காரணமே கருணாநிதி தானே அவரது மகன் இதுவரை காவிரி நதி நீர் பங்கினை பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை அங்கு தற்போது மழைப்பொழிவு அதிகமாகி கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் உபரியான நீரை வெளியேற்றும் தருவாயில் இங்கே அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டு வோம் என்று அறிக்கை விடுத்தார் அப்பா எட்டடி பாய்ந்ததால் மகன் பதினாறு அடி


sundarsvpr
ஜூலை 24, 2024 09:01

சாராய தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்று கூறினால் விமர்சனம் செய்யமுடியாது. ஆனால் ஆண்டவன் அளித்த நீரை தடுக்கி தேக்கி வைப்பது தவறு. கடைமடையில் உள்ள அணைகளில் நீர் நிரம்பிய பிறகு தலைப்பகுதியில் உள்ள அணைகளை நிரப்பவேண்டும் இதுதான் தர்மம். பிச்சைக்காரனுக்கு பிட்சை போடுவதுபோல கொஞ்சம் கொஞ்சமாய் நீரை கொடுப்பது சரியில்லை.


Jayaraman Ramaswamy
ஜூலை 23, 2024 13:26

தமிழ் நாட்டிற்கு விமோசனமா? என்றுமே கிடையாது. கடந்த மூன்று வருடங்களாக, தமிழக சாலைகளின் சென்றிருந்தால் தெரியும். அதையும் மீறி விக்ரவாண்டியில் 82 சதவீத வோட்டு பதிவு. வென்றவரையும் தெரியும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி