ஸ்ரீநகர்: தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரையில், 15 நாட்களில் பனிலிங்கத்தை மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்தாண்டு கடந்த காலத்தை விட, அதிக பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை ஜூன் 28ம் தேதி துவங்கியது.இந்தாண்டு யாத்திரை ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.யாத்திரை துவங்கியதில் இருந்து நேற்று (ஜூலை 13) வரை 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் யாத்திரை நடைபெற உள்ளதால், கடந்த காலத்தை விட, அதிக பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கடந்த கால வரலாற்றை முறியடிப்பார்கள் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டுகளில் தரிசனம் செய்த விபரம்:
2001ம் ஆண்டு - 1.91 லட்சம் பக்தர்கள்,2002ம் ஆண்டு - 1.10 லட்சம் பக்தர்கள்,2003ம் ஆண்டு - 1.70 லட்சம் பக்தர்கள்,2004ம் ஆண்டு - 4 லட்சம் பக்தர்கள்,2005ம் ஆண்டு - 3.88 லட்சம் பக்தர்கள்,2006ம் ஆண்டு- 3.47 லட்சம் பக்தர்கள்,2007ம் ஆண்டு- 2.96 லட்சம் பக்தர்கள்,2008ம் ஆண்டு- 5.33 லட்சம் பக்தர்கள்,2009ம் ஆண்டு- 3.81 லட்சம் பக்தர்கள்,2010ம் ஆண்டு- 4.55 லட்சம் பக்தர்கள்,2011ம் ஆண்டு- 6.21லட்சம் பக்தர்கள்,2012ம் ஆண்டு- 6.35 லட்சம் பக்தர்கள்,2013ம் ஆண்டு- 3.54 லட்சம் பக்தர்கள்,2014ம் ஆண்டு- 3.72 லட்சம் பக்தர்கள், 2015ம் ஆண்டு- 3.52 லட்சம் பக்தர்கள்,2016ம் ஆண்டு- 2.21 லட்சம் பக்தர்கள்,2017ம் ஆண்டு- 2.60 லட்சம் பக்தர்கள்,2018ம் ஆண்டு- 2.85 லட்சம் பக்தர்கள்,2019ம் ஆண்டு- 3.43 லட்சம் பக்தர்கள்,கோவிட் தொற்று காரணமாக, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை.2022ம் ஆண்டு- 3.04 லட்சம் பக்தர்கள்,2023ம் ஆண்டு- 4.50 லட்சம் பக்தர்கள்.