உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் பயணிகளை பயமுறுத்த முயற்சியா? அமைச்சர் வைஷ்ணவ் கேள்வி

ரயில் பயணிகளை பயமுறுத்த முயற்சியா? அமைச்சர் வைஷ்ணவ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயிலில் தினமும் பயணம் செய்யும் 2 கோடி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா? என லோக்சபாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பினார்.'கடந்த சில தினங்களாக ரயில் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. தோல்விகளுக்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. விபத்துக்களை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன' என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசியதாவது: கடந்த இரண்டு மாதங்களில், 4 சரக்கு ரயில்கள் தடம் புரண்டன. இதற்கு ரயில்வே அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. கடந்த ஆண்டில், ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 300 பேர் இறந்தனர் என்றார்.

மத்திய அமைச்சர் பதில்

இதற்கு, அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: 58 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் அதிக ரயில் விபத்துக்கள் நடந்தன. அவர்களது ஆட்சி காலத்தில் ஒரு ரயிலில் கூட தானியங்கி பாதுகாப்பு சாதனத்தை கூட பொருத்தாதது ஏன் ? அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படும். சமூக ஊடகங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி, தினசரி பயணம் செய்யும் 2 கோடி பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாட்டு மக்களிடையே காங்கிரஸ் இப்படி தான் அச்சத்தை ஏற்படுத்துமா? என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.n. Dhasarathan
ஆக 01, 2024 20:48

அஸ்வினி வைஷ்ணவ ஒரு ரயில்வே அமைச்சர் போல பேச வில்லை, காங்கிரஸ் ஆட்சியை இன்னும் எத்தனை காலம் தான் குற்றம் சொல்வீர்கள்? நீங்கள் வந்து பத்து வருடமாக என்ன செய்தீர்கள்? கவாஸ் தொழில் நுட்பம் ஒரே ட்ராக்கில் இரண்டு ரைல்கள் வந்தால் அந்த என்ஜினீக்கள் ஆப் ஆகிவிடும், ஐந்து வருடங்கல் ஆகிவிட்டது, இன்னும் என்ன ஜோசியம் பார்த்துக் கொண்டு உள்ளீர்களா? ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை? இன்னும் ரயில்கள் முட்டிக்கொண்டுதான் உள்ளன, ஏன்? கேள்வி கேட்டால் ரயில் பயணிகளை பயமுறுத்துகிறீகள் என்கிறீர்கள், உயிர் போனால் நீங்கள் கொடுக்க முடியுமா? நடவடிக்கை பற்றி பேசுங்கள், தேவை அற்ற பேச்சுக்கள் வேண்டாம்.


subramanian
ஆக 01, 2024 20:37

ஒடிசா மாநில பாலசோர் விபத்திற்கு காரணம் சிக்னல் பெட்டியை ஊழியர் சேதப்படுத்தியது. இண்டி கூட்டணிக்கு ஓட்டு தேவை என்பதால் இதை கண்டனம் செய்ய வில்லை. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சி கலைக்க பட வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 19:27

பாதுகாப்பை உறுதி செய்யாமல் கூடுதல் ரெயில்களை வணிக நோக்கில் விடுவது பொறுப்பற்ற செயல் .....


ஆரூர் ரங்
ஆக 01, 2024 20:35

பாதுகாப்புக்கே அதிகமாக ஒதுக்கினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது. புதுசு புதுசா ரயில் விட்டால் சாதனையாகக் கூறி ஓட்டுக்களை அள்ளலாம்.


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2024 17:55

கட்டாக்கட்டு ஆளுங்க குட்டைய குழப்பி மீன் பிடிக்கும் கும்பல் . பாஜகவிற்கு கவனம் தேவை. உள்ளடி வேலை ரயில் சேவையில் யாரு ஈடுபட்டுள்ளார்கள் என கண்காணித்தல் மிக மிக அவசியம் ஆகிறது


vadivelu
ஆக 01, 2024 19:16

சந்தேகம் வரத்தான் செய்யுது. எல்லோரும் நல்லவர்கள், ஆனாலும் ஒன்று இரண்டு கோமாளிகள் இருந்தால் எல்லா நாசமும் காசுக்கும் மன மகிழ்ச்சிக்கும் செய்வார்கள். உஷார் தேவை.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை