உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவல் அதிகரிப்பு எதிரொலி? அதிகாரிகள் துாக்கியடிப்பு

ஊடுருவல் அதிகரிப்பு எதிரொலி? அதிகாரிகள் துாக்கியடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ஜெனரல் நிதின் அகர்வால், சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியா ஆகியோரை, பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊடுருவல் அதிகரிப்பு, முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது தான், இந்த அதிரடி மாற்றத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய படைகளில் மிக முக்கிய படையாக பி.எஸ்.எப்., விளங்குகிறது. மேற்கில் பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசத்துடனான எல்லை பகுதிகளில், பி.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும், அவர்களின் ஊடுருவலை தடுப்பதிலும் இவர்களது பங்கு அளப்பரியது.இந்நிலையில், பி.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரல் நிதின் அகர்வாலை பணியில் இருந்து விடுவித்து, அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது. 1989 கேரள கேடரைச் சேர்ந்த நிதின் அகர்வால், பி.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரலாக 2023 ஜூனில் நியமிக்கப்பட்டார். இதே போல், 1990 ஒடிசா கேடரைச் சேர்ந்த சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியாவும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும், மாநில அரசு பணிகளுக்கு உடனடியாக அனுப்பப்படுவதாக, அமைச்சரவை நியமனக் குழு தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சமீபகாலமாக சர்வதேச எல்லையில் இருந்து ஊடுருவல் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் இருவரது செயல்பாடுகளால் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருவரும் செயல்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, இருவரையும் பணியில் இருந்து விடுவித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

subramanian
ஆக 04, 2024 09:49

ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குள் இது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தான் என்ற எண்ணம் தவிர்த்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசு மிகவும் சரியாக பணியாற்றுகிறது.


Velan Iyengaar
ஆக 04, 2024 01:24

உள்துறை அமைச்சர் அவரு எப்போ ?? தூக்கி அடிக்கப்படுவாரு ??? தலைமை சரியாயிருந்தா அதிகாரிகள் சுணக்கமா இருப்பாங்களா ??மந்திரி எந்த எம்பீ யா வாங்கலாம் .. எந்த மாநில கட்சியை கவுக்கலாம் என்று இருந்தால் அந்த மந்தி கையில் இருக்கும் இலாக்காக்கள் எல்லாம் இப்படி தான் கோட்டை விடும் ...நாட்டு பாதுகாப்பை விட பதவியை தக்கவெச்சிக்க தான் முழு முனைப்பும் இருக்கு கேடுகெட்ட ஆட்சி


subramanian
ஆக 04, 2024 09:44

நீ ஒரு அந்நிய கை கூலி என்பதை உன் பதிவுகள் காட்டுகிறது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ