உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் குடையுடன் படுத்திருந்த முதியவர்

தண்டவாளத்தில் குடையுடன் படுத்திருந்த முதியவர்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து பிரதாப்கர் நோக்கி பயணியர் ரயில் நேற்று சென்றது. அப்போது மாவ் ஆய்மா என்ற ரயில் நிலையத்தை கடந்தபோது, அங்குள்ள தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை ரயில் ஓட்டுனர் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே ரயிலை நிறுத்தினார்.கீழே இறங்கி சென்று ரயில் ஓட்டுனர் பார்த்தபோது குடையை பிடித்தபடி முதியவர் ஒருவர் உறங்கியது தெரியவந்தது. தண்டவாளத்தில் இருந்து அந்த முதியவரை எழுப்பி, கீழே இறங்கி செல்லும்படி ரயில் ஓட்டுனர் அறிவுறுத்தினார். அதன்பின், அவர் கீழே இறங்கி சென்றதும் ரயில் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை