உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிருக பலி யாகம் சர்ச்சை: கோவில் நிர்வாகம் கவலை

மிருக பலி யாகம் சர்ச்சை: கோவில் நிர்வாகம் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கண்ணுார் : 'மிருக பலி யாகம் நடந்ததாகக் கூறப்படும் சர்ச்சை நீடிப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்' என, கேரள ராஜராஜேஸ்வர கோவில் தலைமை குருக்கள் குபேரன் நம்பூதிரி பாட் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக, கேரளாவின் தலிபரம்பாவில் உள்ள ராஜராஜேஸ்வர கோவிலில் விலங்குகளை பலியிட்டு சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டது என, அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். கர்நாடக அரசியலைச் சேர்ந்தவர்கள் இந்த யாகத்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த கேரள அரசு, அது தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், மிருக பலி செய்தது தொடர்பான சர்ச்சை நீடிப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளதாக ராஜராஜேஸ்வர கோவில் தந்திரியும், தலைமை குருக்களுமான குபேரன் நம்பூதிரி பாட் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கோவிலில் மிருக பலி யாகம் நடந்ததாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியதை அடுத்து, அவ்வாறு நடந்ததா என பக்தர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம், பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை முடிவுக்கு வராமல் நீடித்தால், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கோவிலில் இது போன்ற யாகம் எதுவும் நடத்தப்படவில்லை என ராஜராஜேஸ்வர கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள அரசும், கோவிலிலோ அல்லது சுற்றியுள்ள பகுதிகளிலோ இது போன்ற யாகம் எதுவும் நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.இந்நிலையில், 'சத்ரு பைரவி யாகம், ராஜராஜேஸ்வர கோவிலில் நடக்கவில்லை; அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான் நடந்தது' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

subramanian
ஜூன் 03, 2024 23:01

மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் திட்டம் கொடுத்தது குற்றம் இல்லையா? படியளக்கும் பகவதிக்கே பாடியளப்பிய. அதுதான் தோஷம். தவிர சிவன் கோவில் தேர் சரிந்தது தோஷம்.


raguram
ஜூன் 03, 2024 10:27

இனி எந்த மத சம்பிரதாயத்திற்கும் மிருகங்களின் கழுத்தை வெட்டும் முன்போ, அல்லது அறுக்கும் முன்போ மயக்க ஊசி போட்டு தான் அவர்களின் வேண்டுதல்களும் கொண்டாட்ங்களும் நடத்திகொள்ளலாமே


Sampath Kumar
ஜூன் 03, 2024 08:49

கோவில் நிர்வாகம் கவலை பட தேவை இல்லை இருக்கவே இருக்கு வரலாற்று சான்றுகள்


sridhar
ஜூன் 03, 2024 09:33

உங்க சர்ச் நிர்வாகம் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம் , கொஞ்சம் கம்முனு இருங்க .


naranam
ஜூன் 03, 2024 04:58

ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத கையாலகதவர்களின் கோழைததனமான பேச்சு இது.


ram
ஜூன் 03, 2024 04:07

துணை முதல்வர்ன்னு பொறுப்பான ஒரு பதவியில் இருக்கும் இவன் இப்படி பொறுப்பற்று பொய்யான செய்தி பரப்பலாமா..? அன்று கோவிலில் யாகம் நடத்தப்பட்டதுன்னு சொன்ன பன்னி, இன்று கோவிலுக்கு பக்கத்திலே தனியாருக்கு சொந்தமானஇடத்திலே நடத்தினாங்க என பொய் சொல்லும் இந்த பன்னியை புடிச்சு கூட்டிலே அடையுங்க சார்...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ