உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பீஹாரில் 10 நாட்களில் 6வது சம்பவம்

மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பீஹாரில் 10 நாட்களில் 6வது சம்பவம்

பாட்னா,: பீஹாரில் நேற்று, மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இங்கு கடந்த 10 நாட்களில் மட்டும் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கிசான்கஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர் கஞ்ச் பகுதியில் பண்ட் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கடந்த 2007ல் கட்டப்பட்டது. சமீபகாலமாக அங்கு கனமழை பெய்வதால், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாலத்தின் கட்டுமான சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் இடிந்து விழுந்தது.கடந்த 10 நாட்களில் பீஹார் மாநிலத்தில் மட்டும் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்துஉள்ளன. தொடர் கனமழையால் மதுபானி பகுதியில் கட்டப்பட்டு வந்த 75 மீட்டர் நீளம் உடைய பாலம் இடிந்து விழுந்தது. அதற்கு முன் கிழக்கு சம்கரன், அராரியா, சிவான், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இதன் காரணமாக, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 10:58

லாலு கூட்டணி ஆட்சியில் வேறு எப்படி காட்டியிருப்பர்.மாட்டுத் தீவனத்திலேயே ஆட்டையை போட்ட கும்பல்.


தேவ்பாண்ட்யா
ஜூலை 02, 2024 08:03

இடிக்கிற செலவு மிச்சம். நிதீஷ் பேசாம பிரதமராக முயற்சிக்கலாம்.


sankaranarayanan
ஜூலை 02, 2024 05:53

பாலங்கள் இல்லாத மாநிலமாக டிக்லேறு பண்ணலாமே


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2024 04:02

தமிழகத்திலிருந்து வந்த கலப்பு சிமெண்டால் தான் பாலங்கள் இடிந்து விழுகினறன. தமிழக ஆட்சியில் ரைடு விட்டால், தான் கலப்பு சிமெண்ட் தடுக்கப்படும்.


Priyan Vadanad
ஜூலை 02, 2024 00:25

திராவிட மாடல் ஆட்சியில் பனை ஓலை பிறந்ததே, அதை கேட்க மாட்டீர்களா?/ காங்கிரஸ் ஆட்சியில் எங்கள் ஊர் வாய்க்காலில் தண்ணீர் பெருகி எங்கள் வயல் வரப்பில் உடைப்பு வந்ததே, அதை கேட்க மாட்டீர்களா?/ என்றெல்லாம் கேள்வி கேட்டு சப்பை முட்டு கொடுக்க ஓடியாங்க ஓடியாங்க.


vaiko
ஜூலை 01, 2024 23:57

மத்திய அரசு உதவியும் நடைபெறும் வரும் எல்லா திடம்களையும் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்யும் வரை ஒன்றிய அரசு பீகார் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு எந்த நிதி உதவியையும் செய்யா கூடாது.


மேலும் செய்திகள்