உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டாவில் மற்றொரு அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவ ஊழியர் கைது

கோல்கட்டாவில் மற்றொரு அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவ ஊழியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டா அரசு மருத்துவமனையில் 26 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டா ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பரபரப்பும், பதற்றமும் அடங்குவதற்குள், அதே கோல்கட்டாவில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு, மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டில், 26 வயது பெண் ஒருவர் தனது குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இரவில் குழந்தையின் அருகே படுத்திருந்த அவரிடம், அங்கு வார்டு பாயாக பணியாற்றி வரும் தனய் பால் (26) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அதனை தன் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதனால், அதிர்ந்து போன அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், வார்டு பாய் தனாய் பாலை கைது செய்ததுடன், அவரது செல்போனை பறிமுதல் செய்து, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, கடந்த மாதம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
செப் 15, 2024 21:39

தண்டனை மிக கடுமையாக இருக்கும்வரையில், இவர்களை திருத்தவே முடியாது. தண்டனை அதி சீக்கிரம் கிடைக்கவேண்டும். முதலில் FIR , பிறகு வழக்கு பதிவு செய்தல், பிறகு வழக்கு பல காலம் நடத்துவது, கடைசியில் பல வருடங்கள் ஆனபிறகு குற்றம் சுமத்தப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால், குற்றம் சுமத்தப்பட்டவரை இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது என்று ஒரு செய்திவரும். இப்படி இருந்தால் எவனுக்கு பயம் வரும்? எவன் குற்றம் செய்யாமல் இருப்பான்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 15, 2024 20:46

தமிழகம் அமைதிப்பூங்கா ......


Mohanakrishnan
செப் 15, 2024 19:47

One judges daughter or wife must be taken care to make yogiji formula right


D.Ambujavalli
செப் 15, 2024 18:59

இந்த அசிங்கம் மருத்துவ மனைகளில் நடப்பதை அறிந்தும் குழந்தைகளைக்கூட சிகிச்சைக்கு அழைத்து வந்து அட்மிட் செய்ய தாய்மார்கள் நடுங்கும் காலம் வந்துவிட்டதே மற்ற மாநிலங்களிலும் இந்நிலை இருக்கும்தானே, ஒவ்வொன்றாகப் புற்றீசல் போல கிளம்பும், திரைத்துறை me டூ pola


Columbus
செப் 15, 2024 18:57

Will he be hung?


அப்பாவி
செப் 15, 2024 17:54

சர்தாண்டா சூனா பானா. இனிமே மீடியாக்கள் இதைப் புடிச்சிக்கிட்டு அதை உட்டுரும்.


கோவிந்தர சு
செப் 15, 2024 17:49

ஆட்சி கலைத்து ஜானதிபதி ஆட்சி அமைத்து பாரபட்சமில்லமா கடும் தண்டனை உடன்


Palanisamy Sekar
செப் 15, 2024 17:33

மம்தா இருக்க பயமேன் என்று துணிந்துவிட்டார்கள் போலும். நாளையே குண்டாசை அனுப்பி அந்த ஆஸ்பத்திரியை சூறையாடிவிட்டால் தடயமே இல்லாமல் ஆக்கிடலாம். அவ்ளோதான். மம்தாவின் சாதனைகள் தொடர்கின்றன இடைவெளி இல்லாமல்.


Sudha
செப் 15, 2024 18:02

இது தமிழ்நாட்டுக்கும் ,இல்லை தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். பொள்ளாச்சி என்னாச்சி? சென்னையிலிருந்து மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி வரை பாலியல் ஆறாக ஓடுது


Sudha
செப் 15, 2024 17:24

ஒரு விஷயம் புரியல, சஞ்சய் ராய் மட்டும் செய்யலன்னு மீடியா சொல்லுதே அப்போ அவர் என்ன கூலி ஆட்களையா கூட்டி வந்தார்? அங்கே இருந்த ஹாஸ்பிடல் ஊழியர் யாராவது தானே இருக்கணும்? இவங்க போராட்டத்தில் 2 டாக்டர் சிக்கினால் என்னவாகும்?


முக்கிய வீடியோ