மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
24 minutes ago
ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
1 hour(s) ago
பெங்களூரு ; கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் கூடுதல் துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவரா என்பதற்கு, அமைச்சர் மஹாதேவப்பா பதில் அளித்துள்ளார்.சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என, பா.ஜ., முன்னாள் எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே கூறினார். இதனால் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல் போனது.அரசியலமைப்பை மாற்ற நினைத்தவர்களை, மக்கள் புறக்கணித்துவிட்டனர். கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன், மத்தியில் ஆட்சி நடத்துவது எளிதான விஷயம் இல்லை.கடந்த 2019 தேர்தலில் கர்நாடகாவில், காங்கிரஸ் ஒரு இடத்தில் தான் வென்றது. இம்முறை ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால், ஐந்து தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பறிபோனது. காங்கிரஸ் ஆட்சி மீது மக்களிடம் அதிருப்தி இல்லை.ஜாதிவாரியாக துணை முதல்வர்களை நியமிக்கலாமா என்று, கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். அதுபற்றி கட்சி மேடையில் தான் விவாதிக்க வேண்டும். பொது இடத்தில் பேசுவது சரியாக இருக்காது. இப்போதைக்கு கூடுதல் துணை முதல்வர்களை நியமிப்பது பற்றி, எந்த விவாதமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
24 minutes ago
1 hour(s) ago