உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2ஜி உத்தரவில் திருத்தம் கேட்பதா? மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!

2ஜி உத்தரவில் திருத்தம் கேட்பதா? மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மத்திய அரசின் பாசாங்குதனத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடுகளை ஏலம்விட வேண்டும் என்று வலியுறுத்திய பா.ஜ., தற்போது அது தொடர்பான தீர்ப்பை திருத்தக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது' என, காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அனுமதி

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியுள்ளதாவது:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசு சார்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவிருப்பதால், அதை விரைவாக விசாரிக்கவும் அனுமதி கேட்டுள்ளது.காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2008ல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க.,வின் மூத்த தலைவர் ராஜா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, இந்த ஒதுக்கீடுகளுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. ஊழல் நடந்துள்ளதாக கூறியது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ல் அளித்த தீர்ப்பில், ஸ்பெக்ட்ரம் போன்ற நாட்டின் சொத்துச்களை ஏலம் வாயிலாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியது.அப்போது, ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., தற்போது தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக, அந்த தீர்ப்பில் திருத்தம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசின் பாசாங்குதனத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. மிகப்பெரும் பணக்கார தொழிலதிபர்களுக்கு உதவு வதற்காக மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது.

விசாரணை

தங்களுடைய கட்சிக்கு, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு, விமான நிலையம், துறைமுகம் என, பல அரசின் சொத்துகள், அந்த பணக்கார நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அரசு தாரைவார்த்துள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், இது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஏப் 28, 2024 10:11

ராசா ஒதுக்கிய அனைத்து டூ ஜி அலைக்கற்றை லைசென்ஸ்களும் முறைகேடாக அளிக்கப்பட்டவை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் கேன்சல் செய்து விட்டது. இன்னும் ஊழல் நடக்கவில்லை சீரோ லாஸ் என திமுக காங்கிரஸ் கூறி மக்களை ஏமாற்றுகின்றன.


கண்ணன்
ஏப் 28, 2024 07:30

பாவம், எவ்வளவு நாட்களுக்குத்தான் வலியே தெரியாமல் நடிக்க முடியும்? கட்சித் தலைமைக் குடும்பத்திற்குப்போன 36000 கோடிகள் குறித்து வெளியே வரும் உண்மைகள் இப்போது முள்ளாக உறுத்த ஆரம்பித்து விட்டனவோ!?!


Rajkumar
ஏப் 28, 2024 03:12

அடேங்கப்பா மத்திய அரசு நீதி மன்றத்தில் கேட்டிருப்பது அரசுக்கு தேவையான அலைகற்றை எலம் இல்லாமல் வைத்து கொள்வதற்காக மட்டும் எல்லா அலைகற்றைகும் அல்ல. காங்கிரஸ் சொல்வது பொய்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை